கோரி ஆன்டர்சன்

கோரி ஜேம்சு ஆன்டர்சன் (Corey James Anderson, பிறப்பு: 13 டிசம்பர் 1990) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்.[1] இவர் தனது முதலாவது ஒருநாள் பன்னாட்டுப் போட்டியை 2013 சூன் 16 அன்று இங்கிலாந்து அணுக்கு எதிராக விளையாடினார்.[2] இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம்,ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் இவர் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சகலத்துறையரான இவர் வடக்கு மாவட்ட அணிகளுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

கோரி ஆன்டர்சன்
Corey Anderson
நியூசிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் கோரி ஜேம்சு ஆன்டர்சன்
வகை பல்துறை
துடுப்பாட்ட நடை இடக்கை
பந்துவீச்சு நடை இடக்கை மித-விரைவு
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 261) 9 அக்டோபர், 2013:  வங்காளதேசம்
கடைசித் தேர்வு 14–18 பெப்ரவரி, 2014:  இந்தியா
முதல் ஒருநாள் போட்டி (cap 181) 16 சூன், 2013:  இங்கிலாந்து
கடைசி ஒருநாள் போட்டி 27 அக்டோபர், 2014:   தென்னாப்பிரிக்கா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள் அணி
2006–2011 கான்டர்பரி
2011–2013 வட மாகாணங்கள்
2014–இன்று மும்பை இந்தியன்ஸ்
தரவுகள்
தேஒருமுதபஅ
ஆட்டங்கள் 7 15 36 38
ஓட்டங்கள் 327 425 1,846 908
துடுப்பாட்ட சராசரி 32.70 42.50 36.19 31.31
100கள்/50கள் 1/1 1/1 3/7 1/5
அதிகூடியது 116 131* 167 131*
பந்துவீச்சுகள் 720 530 2,421 698
விக்கெட்டுகள் 11 22 33 29
பந்துவீச்சு சராசரி 30.54 24.40 38.96 23.03
5 விக்/இன்னிங்ஸ் 0 1 1 2
10 விக்/ஆட்டம் 0 n/a 0
சிறந்த பந்துவீச்சு 3/47 5/63 5/22 5/26
பிடிகள்/ஸ்டம்புகள் 4/– 1/– 22/– 10/–

பெப்ரவரி 18, 2014 தரவுப்படி மூலம்: CricketArchive; http://www.espncricinfo.com/newzealand/content/player/277662.html

கோரி ஆன்டர்சன் 2014 சனவரி 1 இல் மிக விரைவான நூறு ஓட்டங்களை ஒருநாள் வரலாற்றில் எடுத்து சாதனை புரிந்தார். மேற்கிந்திய அணிக்கு எதிராக 36 பந்துகளுக்கு 100 ஓட்டங்களை எடுத்து சாகித் அஃபிரிடியின் சாதனையை முறியடித்தார். இதில் 14 ஆறுகளும்,6 நான்குகளும் அடங்கும். இதற்குமுன் 1996 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் நூறு ஓட்டங்கள் எடுத்து சாதனை புரிந்தார். இச்சாதனையை 2015 சனவரி 18 இல் ஏ பி டி வில்லியர்ஸ் 31 பந்துகளுக்கு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக விளையாடி முறியடித்தார்.

இந்தியன் பிரீமியர் லீக்

2014 இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இவரை 750,000 அமெரிக்க டாலர் மதிப்பில் ஏலத்தில் எடுத்தனர். இவரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓட்டங்கள் எடுத்து சுனில் நரைன் பந்தில் ஆட்டமிழந்தார். இதே போட்டியில் 3 ஓவர்கள் பந்துவீசி 33 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். மே 3, 2014 இல் கிங்சு இலெவன் பஞ்சாபு அணிக்கு எதிரான போட்டியில் 25 பந்துகளில் 35 ஓடங்களை எடுத்துள்ளார். அதே போட்டியில் செதேஷ்வர் புஜாரா இலக்கினைக் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதினைப் பெற்றார்.

மே 25, 2014 இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 190 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டன. 44 பந்துகளில் 95 ஓட்டங்கள் எடுத்து 14.3 ஓவர்களில் வெற்றி இலக்கினை சிறந்த ரன் விகிதத்தில் அடைய உதவினார். 2015 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் துவக்க போட்டிகளில்சிறப்பாக செயல்பட்டார். இவர் விளையாடிய நான்கு போட்டிகளில் இரு அரைநூறுகளை அடித்தார். ஆனால் விரலில் காயம் ஏற்பட்டதனால் இவர் அணியிலிருந்து விலகினார்.

2017 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் போட்டித் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி நிர்வாகம் இவரை 1 கோடி ரூபாய் மதிப்பில் ஏலத்தில் எடுத்தது.[3] 2018 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி நிர்வாகம் இவரை தேர்வு செய்தது. கூலட்ர் நீல் பெங்களூர் அணிக்காகத் தேர்வானார். ஆனால் அவருக்கு காயம் ஏற்பட்டதனால் இவர் தேர்வானார்.[4][5] கூல்டர் நீல் 2017 இந்தியன் பிரீமியர் லீக்கில் 8 போட்டிகளில் 15 இலக்குகளைக் கைப்பற்றி சிறப்பான திறனை வெளிப்படுத்தினார்.இவர் தேர்வானதை பெங்களூர் அணி நிர்வாகம் மார்ச் 24 இல் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.

சர்வதேச நூறுகள்

தேர்வுத் துடுப்பாட்டம்

தேர்வு துடுப்பாட்ட நூறுகள்
# ஓட்டங்கள் போட்டி எதிரணி நாடு இடம் ஆண்டு முடிவு
1 116 2  வங்காளதேசம் வங்காளதேசம் ஷெர் இ வங்காளதேச துடுப்பாட்ட அரங்கம் 2013 சமன்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
# ஓட்டங்கள் போட்டி எதிரணி நாடு இடம் ஆண்டு முடிவு
1 131* 7  மேற்கிந்தியத் தீவுகள் நியூசிலாந்து குயீன்ஸ்டவுன் மையம் 2014 வெற்றி

5 இலக்குகள்

ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
# ஓட்டங்கள் போட்டி எதிரணி நாடு இடம் ஆண்டு முடிவு
1 5/63 12  இந்தியா நியூசிலாந்து ஈடன் பார்க் 2014 வெற்றி

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.