கொங்குநாடு முன்னேற்றக் கழகம்

கொங்குநாடு முன்னேற்ற கழகம் என்பது தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சியாகும். இதன் ஆதரவாளர்கள் பெரும்பான்மையோர் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ளனர்.[1] இதன் சின்னமாக சமையல் எரிவாயு உருளை.

கொங்குநாடு முன்னேற்றக் கழகம்
தலைவர்பெசுட்டு செ. இராமசாமி
பொதுச்செயலாளர்ஈசுவரன்
தொடக்கம்2009
தலைமையகம்கோயம்புத்தூர்
இணையதளம்
http://www.konguperavai.com

தோற்றம்

2009ல் கோயமுத்தூரில் நடந்த கொங்கு வெள்ளாள அல்லது வேளாளக் கவுண்டர்கள் சங்கமான கொங்கு வேளாளர் பேரவையின் மாநாடு மூலம் கொங்குநாடு முன்னேற்றப் பேரவை என்ற பெயரில் இக்கட்சி தொடங்கப்பட்டது. கொங்குநாடு முன்னேற்ற கழகம் என்ற பெயர் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அப்பெயருக்கு இதன் பெயர் மாற்றப்பட்டது. இது கொங்கு வெள்ளாள அல்லது வேளாளக் கவுண்டர்கள் சங்கத்தால் தொடங்கப்பட்ட போதிலும் இக்கட்சி கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து இன மக்களின் முன்னேற்றதிற்காகவும் பாடுபடப்போவதாக கூறியுள்ளது.[2][3][4][5]. கொங்கு பகுதியின் வளர்ச்சியும் நலமும் இதன் குறிக்கோள் என்று இக்கட்சி கூறியுள்ளது[6]. தமிழகத்தின் வருவாயில் 40% கொங்கு பகுதியில் இருந்து வந்தபோதிலும் இப்பகுதி அரசினால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக இக்கட்சி குற்றம் சாட்டுகிறது[7]

2009 மக்களவைத் தேர்தல்

2009ல் நடந்த மக்களவைத் தேர்தலில் 12 இடங்களில் போட்டியிட்ட இக்கட்சி 579,704 வாக்குகளைப் பெற்றது. இக்கட்சி எத்தொகுதியையும் வெல்லவில்லை எனினும் தோன்றிய 4 மாதத்தில் நிறைய வாக்குகள் பெற்றது அரசியல் பார்வையாளர்களால் சிறப்பாக கருதப்படுகிறது[1][8]. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு ஆகிய தொகுதிகளில் 1 லட்சத்துக்கும் அதிகமாகவும் திருப்பூர், நாமக்கல் ஆகிய தொகுதிகளில் 50,000 அதிகமாகவும் வாக்குகளை பெற்று, அத்தொகுதிகளில் விஜயகாந்தின் தே.மு.தி.க கட்சியினை நான்காம் இடத்திற்கு தள்ளியது.

2009 சட்டமன்ற இடைத்தேர்தல்

2009 ஆகத்து மாதம் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் 19588 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தில் வந்து வைப்புத் தொகையை இழந்தது. (காங்கிரசு, தேமுதிகவுக்கு அடுத்தபடியாக, இத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை).[9][10] இது பதிவானவற்றில் 9.8% வாக்குகளாகும். .

2011 சட்டமன்றத் தேர்தல்

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் இக்கட்சி போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது.[11][12] கொமுக போட்டியிட்டு தோலிவியடைந்த 7 தொகுதிகள் : நாமக்கல், கோபிச்செட்டிப்பாளையம், பெருந்துறை, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, சூலூர், பல்லடம்

மேற்கோள்கள்

  1. http://www.thaindian.com/newsportal/politics/new-sub-regional-party-creates-flutter-in-coimbatore-poll-battle_100191447.html
  2. http://news.chennaionline.com/newsitem.aspx?NEWSID=58500191-0d90-4b6a-b3ce-a5f75347a90d&CATEGORYNAME=CHN
  3. http://www.hindu.com/2009/04/10/stories/2009041055640700.htm
  4. http://www.hindu.com/2009/04/29/stories/2009042959840300.htm
  5. http://hindu.com/2009/04/23/stories/2009042351600300.htm
  6. http://www.indianexpress.com/news/meet-best-ramasamy-from-tirupur-tamil-nad/455683/
  7. http://truthdive.com/2010/11/26/dmk-bid-to-wrest-kongunadu.html
  8. http://timesofindia.indiatimes.com/city/chennai/Gounder-consolidation-could-pose-headache-to-major-parties/articleshow/4557663.cms
  9. http://dinamani.co.in/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=110672&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
  10. http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=LatestNews&artid=110672&SectionID=164&MainSectionID=0&SEO=&Title=தொண்டாமுத்தூர்+இடைத்தேர்தல்+:+காங்கிரஸ்+வெற்றி
  11. http://articles.timesofindia.indiatimes.com/2011-03-03/coimbatore/28650284_1_knmk-aiadmk-kongunadu-munnetra-kazhagam
  12. http://www.inneram.com/2011030313913/kongunadu-party-allotted-7-seats-in-dmk-front
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.