கொடிமரம்
கொடிமரம் என்பது இந்துக் கோவில்களில் பலிபீடத்திற்கு அருகே அமைக்கப்பெறுகின்ற கொடியேற்றுகின்ற மரமாகும். இதற்கு துவஜஸ்தம்பம் என்ற சமஸ்கிருதப் பெயரும் உண்டு. சிவாலயங்களில் கொடி மரம், நந்தி மற்றும் பலிபீடம் ஆகியவை மூலவரை நோக்கியே அமைக்கப்பெறுகின்றன.
.jpg)
தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலின் கொடி மரம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் கொடி மரம்
அடிப்பகுதியான சதுரம், அதற்கு மேல் எண்கோணவேதி அமைப்பு மற்றும் தடித்த உருளை பாகம் என இந்துக் கோவில் கொடிமரம் மூன்று பாகங்களை உடையன. இதில் சதுரப்பகுதி பிரம்மாவினையும், எண்கோணவேதி அமைப்பு திருமாலையும், உருளையமைப்பு சிவனையும் குறிப்பதாக நம்பப்படுகிறது.[1]
இறைவனுக்கு ஏற்றப்பட வேண்டிய கொடியின் சின்னம் குறித்து சூரிய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அவற்றின் அட்டவணை கீழே.
வரிசை | இறைவன் | கொடி |
---|---|---|
1 | சிவபெருமான் | நந்திக் கொடி |
2 | திருமால் | கருடக் கொடி |
3 | சூரிய தேவன் | வியோமாக் கொடி |
4 | வருண தேவன் | அன்னக் கொடி |
5 | குபேரன் | நரன் கொடி |
6 | முருகன் | சேவல் கொடி]] |
7 | விநாயகன் | மூசிக கொடி |
8 | இந்திரன் | யானைக் கொடி |
9 | யமன் | எருமைக் கொடி |
10 | துர்கை | சிம்மக் கொடி |
11 | சனி பகவான் | காக்கைக் கொடி |
12 | அருச்சுனன் | அனுமன் கொடி |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.