மூலவர்

மூலவர் இந்து ஆலயங்களின் கர்ப்பக்கிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்தியாகும். பொதுவாக கருங்கல்லினாலேயே மூலவர் அமைக்கப்பட்டிருப்பார். சிவன் கோயில்களில் சிவலிங்கமே மூலவராக அமைவது மரபு. மூலவரின் பெயர் கொண்டே அந்த ஆலயங்கள் அழைக்கப்படுகின்றன. பொதுவாக மூலவர் பூஜை நடைபெறும் வேளைகளிலே காட்சி தருவார். சில கோயில்களில் மூலவரே உற்சவராகவும் இருப்பார். இந்த மூலவரையே விழாக்காலங்களில் உற்சவராகவும் எடுத்துச் செல்வர். இந்த விக்ரகமானது சகட விக்கிரகம் என்று அழைக்கப்படும். [1]

சிவாலயங்களில்

சிவாலயங்களில் சிவபெருமானின் அருவுருவ வடிவமான லிங்கமே மூலவராக அமைக்கப்படுகிறது. இந்த லிங்கமானது தலவரலாறுகளில் எந்த எந்த தேவர்களும், முனிவர்களும், உயிரினங்களும் வணங்கினர் என்ற தகவல்களோடு இடம் பெறுகிறது. சில மூலவர் லிங்கங்களில் தலவரலாற்றுக்கு தக்கபடி, காயங்களோ, நிறம் மாறும் குணம் கொண்டவையாகவோ, சாய்ந்த நிலையிலோ காணப்படுகின்றன.

  • தஞ்சாவூர் பெரிய கோயில் லிங்கமானது 23 அரை அடி உயரமானதாகும்.
  • திருக்கருகாவூர் முல்லைவனநாதர் கோயிலில் உள்ள இலிங்கமானது, முல்லைக் கொடி படர்ந்த காணத்தால் அந்த கொடியின் வடுவுடன் உள்ளது.

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

  1. முனைவர் தா.அனிதா (2018 அக்டோபர் 18). "கம்பன் வணங்கிய கலைமகள்". கட்டுரை. இந்து தமிழ். பார்த்த நாள் 19 அக்டோபர் 2018.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.