சோடச உபசாரம்
சோடச உபசாரம் என்பது இந்து கோவில்களில் இறைவனுக்கு நைவேத்யத்தினை தொடர்ந்து செய்யப்படும் பதினாறு வகையான உபசாரங்களாகும். இதனை சோடச உபசார பூஜை, சோடச தீபாராதனை, சோடச தீபாராதனை உபசாரம் எனவும் அழைப்பர். தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தம் என்பவர் இப்பூஜைக்கு நிருத்ய நியதிகளையும் முறைகளையும் உருவாக்கியவராக அறியப்பெறுகிறார்[1].
இந்த உபசார முறைகள் பண்டைய இந்தியாவில் அரசர்களுக்கு செய்யப்பட்டவையாகும். பின்பு அவைகள் இறைவனுக்கு செய்யப்படுபவைகளாக மாற்றப்பட்டன[2].
சோட உபசார பட்டியல்
- ஆவாகனம்
- தாபனம்
- சந்நிதானம்
- சந்நிரோதனம்
- அவகுண்டவம்
- தேனுமுத்திரை
- பாத்தியம்
- அசமனீயம்
- அருக்கியம்
- புஷ்பதானம்
- தூபம்
- தீபம்
- நைவேத்தியம்
- பாணீயம்
- செபசமர்ப்பணம்
- ஆராத்திரிகை
சோடச பொருள்களின் பட்டியல்
இவற்றையும் காண்க
ஆதாரங்கள்
- http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303021&format=print&edition_id=20030302 பரத நாட்டியம் - சில குறிப்புகள் - வைஷாலி
- http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20606027&format=print&edition_id=20060602
- http://shaivam.weebly.com/29803007299230092990300929933016296529953021.html
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.