கொங்கணி திரைத்துறை
கொங்கணி திரைத்துறை, கொங்கணி மொழியில் திரைப்படங்களை வெளியிடும் திரைத்துறை ஆகும். இந்திய மாநிலங்களான கோவா, மகாராட்டிரம், கருநாடகம் ஆகிய மாநிலங்களில் கொங்கணி திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன.[1]
மோகச்சோ அன்வதோ என்ற முதல் கொங்கணி படம் 1950ஆம் ஆண்டின் ஏப்ரல் 24ஆம் தேதியில் வெளியானது. இதை ஜெர்ரி பிராகன்சா என்பவர் தயாரித்து இயக்கியிருந்தார்.[2][3] எனவே, இந்த நாளை கொங்கணி திரைப்பட நாளாக திரைத்துறையினர் கொண்டாடுகின்றனர்.[4]
2009ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களின் வரிசையில் தி மேன் பியாண்டு தி பிரிட்ஜ் என்ற கொங்கணி மொழிப் படமும் சேர்க்கப்பட்டது.[5]
சிறந்த கொங்கணி திரைப்படத்துக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் விருது வழங்குகிறது. இது வரை வெளியாகியுள்ள கொங்கணி படங்களில் பெருவெற்றி பெற்றது ஓ மரியா என்ற திரைப்படம். இதை ராஜேந்திர தாலக் என்பவர் இயக்கினார்.[6]
சான்றுகள்
- http://www.hindu.com/2011/04/17/stories/2011041760220500.htm
- http://www.daijiworld.com/news/news_disp.asp?n_id=59256&n_tit=Panaji%3A+Konkani+Cinema+-+A+Long+Way+to+Go
- http://groups.yahoo.com/group/gulf-goans/message/31478
- http://www.navhindtimes.in/panorama/konkani-cinema-day-some-reflections
- Dearcinema.com
- http://www.navhindtimes.in/iwatch/celebrating-konkani-cinema
வார்ப்புரு:இந்தியத் திரைத்துறை