கே. சங்கர்
கே. சங்கர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். 1926 மார்ச்சு 17 அன்று மலபாரில் (தற்போதைய கேரளம்) பிறந்த இவர் 80க்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கே. சங்கர் | |
---|---|
பிறப்பு | Kunnesscri Shankar மார்ச்சு 17, 1926 [1] |
இறப்பு | மார்ச்சு 5, 2006 79)[1] | (அகவை
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், படத்தொகுப்பாளர் |
வாழ்க்கைக் குறிப்பு
திரை வாழ்க்கை
இந்தியாவின் புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏவிஎம் தயாரிப்பகத்தில் படத்தொகுப்பாளராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய சங்கர், பின்னர் திரைப்படங்களை இயக்கத் தொடங்கினார். இவர் இயக்கிய முதல் திரைப்படம் டாக்டர் என்னும் சிங்கள மொழித் திரைப்படமாகும்.[2] இவர், எம். ஜி. இராமச்சந்திரன் நடித்த குடியிருந்த கோயில், அடிமைப் பெண், என். டி. ராமராவ் நடித்த பூகைலாஷ், ஜெயலலிதா நடித்த கௌரி கல்யாணம் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியதன் மூலமாக தென்னிந்தியாவின் மூன்று முதல்வர்கள் நடித்த திரைப்படங்களை இயக்கியவர் என்ற பெருமை பெற்றவர்.
பல வெற்றித் திரைப்படங்களை இயக்கிய பின்னர் தாய் மூகாம்பிகை, வருவான் வடிவேலன் உள்ளிட்ட பக்தித் திரைப்படங்களை இயக்கினார்.[3] இவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தமிழ்நாடு அரசின் ராஜா சாண்டோ விருதினைப் பெற்றுள்ளார்.
திரைப்பட விபரம்
இது முழுமையான பட்டியல் அல்ல.
ஆண்டு | திரைப்படம் | பங்காற்றியது | மொழி | குறிப்புகள் | |
---|---|---|---|---|---|
இயக்கம் | படத்தொகுப்பு | ||||
1953 | லட்கி | ![]() | ![]() | இந்தி | |
1954 | சங்கம் | ![]() | ![]() | இந்தி | |
1954 | பெண் | ![]() | ![]() | தமிழ் | |
1954 | சிறீ காளகசுதீசுவரா மகாத்யம் | ![]() | ![]() | தெலுங்கு | |
1956 | நாக தேவதை | ![]() | ![]() | தமிழ் | |
1958 | பூகைலாஷ் | ![]() | ![]() | தெலுங்கு | பக்த ராவணா என தமிழில் மொழிமாற்றப்பட்டு வெளியானது. |
1958 | பூகைலாஷ் | ![]() | ![]() | கன்னடம் | |
1959 | சிவகங்கை சீமை | ![]() | ![]() | தமிழ் | |
1960 | கவலை இல்லாத மனிதன் | ![]() | ![]() | தமிழ் | |
1960 | கைராசி | ![]() | ![]() | தமிழ் | |
1961 | அரப்பவன் | ![]() | ![]() | மலையாளம் | |
1962 | சூலா | ![]() | ![]() | இந்தி | |
1962 | பாத காணிக்கை | ![]() | ![]() | தமிழ் | |
1962 | ஆலயமணி | ![]() | ![]() | தமிழ் | |
1962 | ஆடிப்பெருக்கு | ![]() | ![]() | தமிழ் | |
1963 | ஏழை பங்காளன் | ![]() | ![]() | தமிழ் | |
1963 | பணத்தோட்டம் | ![]() | ![]() | தமிழ் | |
1963 | பரோசா | ![]() | ![]() | இந்தி | |
1963 | இது சத்தியம் | ![]() | ![]() | தமிழ் | |
1964 | ராஜ்குமார் | ![]() | ![]() | இந்தி | |
1964 | ஆண்டவன் கட்டளை | ![]() | ![]() | தமிழ் | |
1964 | வீரக்கனல் | ![]() | ![]() | தமிழ் | |
1965 | பஞ்சவர்ணக் கிளி | ![]() | ![]() | தமிழ் | |
1965 | கலங்கரை விளக்கம் | ![]() | ![]() | தமிழ் | |
1965 | அன்புக்கரங்கள் | ![]() | ![]() | தமிழ் | |
1966 | சந்திரோதயம் | ![]() | ![]() | தமிழ் | |
1966 | கௌரி கல்யாணம் | ![]() | ![]() | தமிழ் | |
1968 | குடியிருந்த கோயில் | ![]() | ![]() | தமிழ் | |
மறைவு
தனது மனைவி மற்றும் 8 குழந்தைகளுடன் வசித்து வந்த சங்கர், மாரடைப்பின் காரணமாக 2006 மார்ச்சு 5 அன்று இரவு 7 மணியளவில் தனது 80 ஆவது அகவையில் காலமானார்.[1]
மேற்கோள்கள்
- "K. Shankar dies". thehindu.com. பார்த்த நாள் 2014-12-18.
- "கடும் உழைப்பால் டைரக்டராக உயர்ந்த கே.சங்கர்: எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை இயக்கினார்". மூல முகவரியிலிருந்து 7 ஏப்ரல் 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 ஏப்ரல் 2015.
- "சிவாஜியின் 10 படங்களை இயக்கினார் கே.சங்கர்". மூல முகவரியிலிருந்து 7 ஏப்ரல் 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 7 ஏப்ரல் 2015.
வெளியிணைப்புகள்
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் K. Shankar
- "K. Shankar filmography". filmibeat.com. பார்த்த நாள் 2014-12-18.
- "K. Shankar Movies". bharatmovies.com. பார்த்த நாள் 2014-12-18.
- "K. Shankar filmography". spicyonion.com. பார்த்த நாள் 2014-12-18.