கெவின் ரட்

கெவின் மைக்கல் ரட் (Kevin Michael Rudd, பிறப்பு: செப்டம்பர் 21, 1957) ஆஸ்திரேலியாவின் அரசியல்வாதியாவார். இவர் ஜூன் 2013 முதல் ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவராகவும், நாட்டின் 26வது பிரதமராகவும் இருப்பவர். இதற்கு முன்பு 2007 முதல் 2010 வரை பிரதமராகவும், 2006 முதல் 2010 வரை ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவராகவும் இருந்தார். 1949ஆம் ஆண்டு ராபர்ட் மென்சீஸ்க்கு பிறகு தற்போதுதான் ஆஸ்திரேலியாவில் ஒரு முன்னால் பிரதமர் மீண்டும் பிரதமாகிறார்.

கெவின் ரட்
Kevin Rudd

நாஉ
ஆஸ்திரேலியாவின் 26வது பிரதமர்
பதவியில்
27 சூன் 2013  18 செப்டம்பர் 2013
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் குவெண்டின் பிரீசு
துணை அந்தோனி அல்பனீசி
முன்னவர் ஜூலியா கிலார்ட்
பின்வந்தவர் டோனி அபோட்
பதவியில்
3 டிசம்பர் 2007  24 சூன் 2010
அரசர் ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபெத்
தலைமை ஆளுநர் மைக்கேல் ஜெப்ரி
குவெண்டின் பிரீசு
துணை ஜூலியா கிலார்ட்
முன்னவர் ஜோன் ஹவார்ட்
பின்வந்தவர் ஜூலியா கிலார்ட்
தொழிற்கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
26 சூன் 2013
துணை அந்தோனி அல்பனீசி
முன்னவர் ஜூலியா கிலார்ட்
பதவியில்
4 டிசம்பர் 2006  24 சூன் 2010
துணை ஜூலியா கிலார்ட்
முன்னவர் கிம் பீஸ்லி
பின்வந்தவர் ஜூலியா கிலார்ட்
ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர்
பதவியில்
14 செப்டம்பர் 2010  22 பெப்ரவரி 2012
பிரதமர் ஜூலியா கிலார்ட்
முன்னவர் ஸ்டீவன் சிமித்
பின்வந்தவர் பொப் கார்
எதிர்க்கட்சித் தலைவர்
பதவியில்
4 டிசம்பர் 2006  3 டிசம்பர் 2007
துணை ஜூலியா கிலார்ட்
முன்னவர் கிம் பீஸ்லி
பின்வந்தவர் பிரெண்டன் நெல்சன்
கிரிஃபித் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 அக்டோபர் 1998
முன்னவர் கிரயெம் மெக்டூகல்
தனிநபர் தகவல்
பிறப்பு கெவின் மைக்கேல் ரட்
21 செப்டம்பர் 1957 (1957-09-21)
நாம்பூர், குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா
அரசியல் கட்சி தொழிற்கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) தெரேசு ரீன்
பிள்ளைகள் 3
படித்த கல்வி நிறுவனங்கள் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம்
சமயம் ஆங்கிலிக்கம்[1]
கையொப்பம்
இணையம் பிரதமரின் இணையதளம்
தனிப்பட்ட வலைத்தளம்

ஒருபால் திருமணங்களை வெளிப்படையாக ஆதரித்த முதல் ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட்தான்.[2][3][4] ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே அதிகமான பெண்கள் அங்கம் பெற்றுள்ளதும் இவரின் இரண்டாவது அமைச்சரவையில்தான்.[5][6]

ஆஸ்திரேலியத் தொழிற்கட்சி 2013ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து கெவின் ரட் 18 செப்டம்பர் 2013 அன்று இரண்டாவது தடவையாக பிரதமர் பதவியை துறந்தார் [7]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.