கூவம் (ஊர்)
கூவம் என்பது தமிழ்நாட்டின், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இந்தக் கிராமத்துக்கு அருகில்தான் கூவம் ஆறு தோன்றி, கிழக்குப் பக்கமாக ஓடிச் சென்னை நகரத்தின் மத்தியில் பாய்ந்து கடலில் கலக்கிறது.
கூவம் கிராமத்துக்கு திருவிற்கோலம் என்ற பெயரும் உண்டு. இவ்வூரின் திரிபுராந்தகர் கோயில் திருஞானசம்பத்தரால் பாடல் பெற்றது. இந்த சிவன் கோவில் யானைக் கோவில் (கஜபிருஷ்டவிமான) அமைப்பை உடையது.
கூவத்தில் சிவபெருமான் முப்புரங்களை அழித்தாா் என்று இவ்வூர் புராணம் கூறுகிறது. இக்கிராமத்துக்கு அருகிலே ஒரு கல் தூரத்தில் நரசிங்கமங்கலம் என்னும் கிராமமும் அதற்கு அருகில் ஒரு கல் தூரத்தில் சிவபுரம் என்ற கிராமமும் உள்ளது. நரசிங்கமங்கலம், கூவம், கூவத்தில் சிவபெருமான் முப்புரங்களை எரித்தது ஆகிய இவைகளையொல்லாம் ஒருங்கு சேர்த்துச் சிந்தித்துப் பாா்த்த போது, இந்தக் கிராமம் பண்டைக் காலத்தில் பெளத்த கிராமமாக இருந்து இங்குப் பெளத்தக் கோயில் இருந்திருக்க வேண்டும் என்று மயிலை சீனி. வேங்கடசாமி ஐயுறுகிறார்.[1]
மேற்கோள்கள்
- மயிலை சீனி.வேங்கடசாமி தமிழுக்கு வழங்கிய கொடை