குளமங்கலம்

குளமங்கலம் (ஆங்கிலம்: Kulamangalam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். குளமங்கலம் கிராமம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

  1. வடக்கு குளமங்கலம்,
  2. தெற்கு குளமங்கலம்.
குளமங்கலம்
குளமங்கலம்
இருப்பிடம்: குளமங்கலம்
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°23′N 78°59′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் புதுக்கோட்டை
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 3,215
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


72 மீட்டர்கள் (236 ft)

இக்கிராமத்தின் மையப் பகுதியில் மிக பழமை வாய்ந்த மிகப்பெரிய குதிரை சிலையுடன் கூடிய பெருங்கரையடி மீண்ட அய்யனார் ஆலயம் உள்ளது. இக்குதிரைச் சிலை ஆசியாவில் மிக உயரமான குதிரை என வர்ணிக்கப்பட்டுள்ளது.

ஆலயம் மற்றும் வழிபாடு

இங்கு ஆண்டு தோறும் மாசி மாதம் மகம் நட்சத்திரம் வரும் நாளில் நடைபெறும் மாசி மகம் எனப்படும் திருவிழா சிறப்புடையது. இந்நாளில் அருகிலுள்ள பல ஊர்களி்லிருந்து அதிக அளவில் மக்கள் வந்து வழிபட்டுச் செல்கின்றனர். இக்கோயிலுக்கு நேர்த்திக்கடன் செய்து கொண்டவர்கள் செய்தவர்கள் வழிபாடு செய்து அன்னதானமும் அளிக்கின்றனர். இக்கோயிலுக்கு வரும் கிராமத்து மக்கள் நெடுங்காலமாக தங்கள் ஊரிலிருந்து மாட்டு வண்டியில் குடும்பத்துடன் வந்து தங்கி வழிபட்டுச் செல்கின்றனர்.

தொழில் மற்றும் வாழ்க்கைமுறை

இங்குள்ளவர்கள் விவசாயத்தையே முழுமையாக நம்பி உள்ளனர். விவசாயத்திற்குத் தேவையான நீர் ஆழ்குழாய் கிணறு மூலம் பெறப்படுகிறது. இக்கிராமம் மட்டுமின்றி இக்கிராமத்தினைச் சுற்றியுள்ள பதினைந்து கிராமங்கள் ஆழ்குழாய் கிணற்றை நம்பித்தான் விவசாயம் செய்து வருகின்றனர்.

சமூக அடையாளம்

இப்பகுதியில் மிகுந்த தமிழ் ஆர்வலர்களும் மற்றும் முத்தரையர் சமூகம் தழைத்து விளங்கியதற்கான அடையாளமும் இவ்வாலயத்தின் கல்வெட்டுகளிருந்து புலப்படுகிறது.இப்பகுதியைச்சுற்றி சுமார் பதினைந்து கிராமங்களிலிருந்து லட்சக்கணக்கானோர் ஒன்று சேரும் ஒரே இடம் இந்த ஆலயம் ஆகும். இக்கிராமங்களில் திருமணம் முடிக்கும் ஒவ்வொரு தம்பதியினரும் இந்த ஆலயத்திற்கு தவறாமல் வந்து வழிபட்டு செல்கின்றனர்.மேலும் இப்பகுதியுடன் நெருங்கிய கலாச்சார உறவுகளை முத்தரையர் மன்னர்கள் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

அரசியலில் குளமங்கலம்

ஆலங்குடி (சட்டமன்றத் தொகுதி)யில் முதன் முறையாக இப்பகுதியில் இருந்து திரு.ராசசேகரன் என்பவர் தற்போது(2006–2011) ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இந்திய பொதுவுடைமைக் கட்சியைச் சேர்ந்தவர்.இத்தோகுதியைப் பொருத்தவரை இடதுசாரிகளுடன் கூட்டணியில் இருப்பவர்களே வெல்வது தொடர்கிறது..

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.