குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் குலசேகரபட்டினம் ஊரின் கடற்கரையில் அமைந்த 300 ஆண்டுகள் பழமையான சக்தி தலமாகும்.[1] இங்கு ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா 12 நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் திருவிழாவை வட்டார வழக்கில் தசரா என்று அழைக்கின்றனர்.

திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையில் அமைந்த இக்கோயில் திருச்செந்தூரிலிருந்து 18 கிமீ தொலைவிலும், கன்னியாகுமரிலிருந்து 20 கிமீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து 65 கி.மீ தொலைவிலும், தூத்துக்குடியிலிருந்து 55 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

இத்திருக்கோவில் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டது என்ற வதந்தி இன்றளவும் நிலவுகிறது. ஆனால் விஸ்வ குல ஆச்சாரி சித்தர் அய்யாத்துரைக் கவிராயரால் அய்யாத்துரைக் கவிராயர் கட்டப்பட்டு இன்று பார் புகழும் புகழ் பெற்ற குலசேகரன்பட்டணம் ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலின் மறைக்கப்பட்ட உண்மை வரலாறு சுற்று வட்டார ஊர் மக்கள் மட்டுமே அறிவர். முத்தாரம்மன் திருக்கோவிலைக் கட்டிய அய்யாத்துரைக் கவிராயரின் ஜீவசமாது குலசை மூவர் ஜீவ சமாதி திருக்கோவிலின் கிழக்குப் பக்கம் கவிராயர் முடுக்கு பகுதியில் இன்றளவும் உள்ளது. பாண்டிய மன்னர்தான் இத்திருக்கோவிலைக் கட்டினான் என்பதை மெய்ப்பிப்பதற்காக சித்தரின் ஜீவ சமாதியை சிலர் இடித்து தள்ளி அப்பொய்யை நிரூபிக்க முடியாமல் இன்றளவும் வழக்கு நடைபெறுகிறது .

தசரா

மகிசாசூரன் என்ற அசுரனை அன்னை பராசக்தி வதம் செய்து தேவர்களை காத்த நாளினையே தசராவாக கொண்டாடுகின்றனர். நவராத்திரியின் ஒன்பது நாளிலும் பக்தர்கள் விரதம் இருந்து அம்மனுக்கு மாலை சூடி வேடமணிந்து பரவசமாக ஆடியும் பாடியும் பக்தர்களிடம் காணிக்கை பெறுகின்றனர். பத்தாம் நாளில் சூரசம்காரம் வெகு விமரிசையாக நடைபெருகிறது. அத்துடன் பக்தர்கள் மாலையினை கழற்றி விரதத்தினை முடித்துக்கொள்கின்றனர்.

2014 தசரா

  • 2014 ஆம் ஆண்டின் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவின் மகிசாசூரசம்ஹாரம் கொண்டாட்டங்கள் பொதிகை தொலைக்காட்சியில் 3. அக்டோபர் 2014 அன்று இரவு 10.15க்கு ஆரம்பித்து ஒளிபரப்பப்பட்டது.
  • நாலுமாவடி பகுதியின் கிறித்துவ மதபோதகர் மோகன் சி லாரன்ஸ் என்பவர் தன் பத்திரிக்கையில் பக்தர்கள் விரதமிருந்து கொண்டாடும் இவ்விழாவை மதவுணர்வைக் காயப்படுத்தும் வண்ணம் எழுதியது பிரச்சனைக்குள்ளாகி மோகன் சி லாரன்சைக் கைது செய்யக்கோரி மனு அளிக்கப்பட்டது.[2][3]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

  • குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் அமைவிடம்
  • குலசேகரபட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில்
  • தசரா
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.