குடும்பிமலைச் சண்டை

மட்டக்களப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான கரடியானாறு, புல்லுமலை, கொக்கட்டிச்சோலை போன்ற பகுதிகளில் இலங்கை விமானப்படையின் கிபிர் குண்டுவீச்சுவிமானம் குண்டுகளை வீசிவருகின்றது. தவிர சத்துருகொண்டான், மட்டுநகர், புதூர், பிள்ளையாரடி,ஒட்டமாவடி ஆகிய இடங்களில் உள்ள இராணுவ முகாம்களிருந்து தொடர்ச்சியாக செக் நாட்டுப் பல்குழற் பீரங்கிகள், ஆட்டிலறி மூலம் தாக்குதல் நடாத்தப்பட்டு வருவதால் மட்டக்களப்பு நகரப்பகுதி அதிர்ந்து கொண்டிருக்கின்றது.

Battle of Thoppigala
the ஈழப் போர் பகுதி
நாள் 25 April – 11 July 2007
இடம் குடும்பிமலை, இலங்கை
Sri Lankan Army victory
பிரிவினர்
இலங்கை ஆயுதப் படைகள் தமிழீழ விடுதலைப் புலிகள்
தளபதிகள், தலைவர்கள்
Gen. சரத் பொன்சேகா,
Maj Gen Parakrama Pannipitiya
Swarnam / Ramesh
பலம்
around 1,200 around 1,000
இழப்புகள்
48 killed (according to Sri Lankan Army) 700–800 killed (according to Sri Lankan Army claims)

பெப்ரவரி 27 ல் இத்தாலிய, அமெரிக்க இராஜதந்திரிகள் மட்டக்களப்பு வந்திறங்கியபோது புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல் சம்பவத்தை அடுத்தே இலங்கை இராணுவத்தால் புலிகளின் கட்டுபாட்டு பிரதேசங்கள் நோக்கி மூர்க்கத்தமாக குண்டுகளை வீசிவருகின்றது. மேலும் தரைவழியாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை நோக்கி இலங்கை இராணுவம் முன்னேறவும் முயற்சிக்கின்றது.

40,000 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பெரும்பாலும் உடுத்த உடையுடனேயே மட்டக்களப்பு நகரப்பகுதியை சார்ந்த பிரதேசங்களான புதூர், கள்ளியங்காடு, பிள்ளையாரடி போன்ற இடங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். தற்போதுள்ள நலன்புரி நிலையங்கள் இவர்களால் நிரம்பி வழிகின்றன. மட்டு அரச அதிபர் திணைக்களம் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஸ்தானியம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் உட்படப் பல்வேறு அமைப்புக்களும் உதவியை ஆரம்பித்துள்ளபோதும் தொடர்ந்துவரும் யுத்த சூழ்நிலைகாரணமாக உதவிவழங்குவதில் தாமதமேற்படுகின்றது.

கம்பிவழி தொலைபேசி தவிர்ந்த எனைய நகர்பேசி மற்றும் CDMA சேவைகள் 6 மார்ச் 2007 இல் இருந்து செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதால், உதவி வழங்குதலில் ஐக்கிய நாடுகள் (சொந்த வானொலித் தொடர்பாடல் வலையமைப்பைப் கொண்டுள்ளதால்) தவிர்ந்த ஏனைய அமைப்புக்களில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாகவும் தெரிகின்றது.

வெளி இணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.