கு. மா. பா. கபிலன்

கு. மா. பா. கபிலன் (பிறப்பு: பெப்ரவரி 2, 1955) தமிழகக் கவிஞர் ஆவார்.[1] இவர் கவிஞர் கு. மா. பாலசுப்பிரமணியத்தின் இளைய மகன் ஆவார். சென்னை மாவட்டம் மயிலாப்பூரைச் சேர்ந்தவர்.

கு.மா.பா. கபிலன்
பிறப்புகபிலன்
பெப்ரவரி 2, 1955 (1955-02-02)
சென்னை
சென்னை மாவட்டம்
தமிழ்நாடு,
 இந்தியா.
இருப்பிடம்சென்னை
தேசியம்இந்தியர்
சமயம்இந்து
பெற்றோர்கு. மா. பாலசுப்பிரமணியம்,
ஜெயலட்சுமி
வாழ்க்கைத்
துணை
லதா
பிள்ளைகள்லலிதப்பிரியா

கல்வி

இவர் 1971 முதல் 74 வரை மாநிலக் கல்லூரியில் இளங்கலை பொருளாதாரம் படித்தார், சென்னை பல்கலைக்கழகத்தில் 1975 ல் நூலகவியல் சான்றிதழ் படிப்பில் தேர்வு பெற்று கன்னிமரா பொது நூலகத்தில் 1978 வரை பணியாற்றினார். பின்னர் இந்தியன் வங்கியில் சேர்ந்து 2014 பிப்ரவரி பணிஓய்வு பெற்றார்.

எழுதியுள்ள நூல்கள்

  • சித்திரம் பேசுதடி (கவிதைத் தொகுப்பு1) - 1999
  • நான் விரும்பும் கவிஞர் கு.மா.பா. திரைப்படப் பாடல்கள் - 2011
  • கவிஞர் கு.மா.பா. திரை இசைப்பாடல்கள் (பாடல்கள் தொகுப்பு) - 2013
  • கபிலனின் கவி எண்ணமும் கலைவண்ணமும் (தனித்தொகுப்பு) - 2014
  • முத்துச்சரங்கள் (கவிதைத் தொகுப்பு -2) - 2015

வானொலி நேயர் வட்டம்

சென்னை வானொலி நிலையம் மற்றும் அதன் பண்பலை வரிசைகளிலும் இவரது கவிதகள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.[2]

பாராட்டும் பட்டமும்

  • மகாகவி பாரதி நற்பணி மன்றம் இவருக்கு இலக்கியச்சுடர் பட்டத்தை 2008-ஆம் ஆண்டு வழங்கியது.
  • சென்னை தொலைக்காட்சி நடத்திய கவிதை போட்டியில் 12,000 கவிதைகளில் இவரது கவிதை 3-வது பரிசினைப் பெற்றது.
  • ஜெயா தொலைக்காட்சியில் இவரது சிறப்பு தேன்கிண்ணம் ஒளிபரப்பப்பட்டது.
  • பொதிகை தொலைக்காட்சியில் கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேநீர் எனும் நிகழ்ச்சியில் 2015ம் ஆண்டு பங்கேற்றார்.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.