கிர் சோம்நாத் மாவட்டம்

கிர் சோம்நாத் மாவட்டம் (Gir Somnath district) வேராவல் நகரை தலைமையிடமாகக் கொண்டு, 15-08-2013ஆம் நாளில் புதிதாக துவக்கப்பட்ட தேவபூமி துவாரகை மாவட்டம் உட்பட ஏழு மாவட்டங்களில் இதுவும் ஒன்றாகும். [1] ஜூனாகாத் மாவட்டத்தின் கிர் தேசியப் பூங்கா மற்றும் சோம்நாத் வருவாய் கோட்டம் போன்ற சில பகுதிகளை பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாவட்டம் இது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் வேராவல் ஆகும்.

15-08-2013-இல் துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் குசராத்து மாநிலத்தின் புதிய வரைபடம்
சோமநாதர் கோயில் நுழைவாயில்

கிர்சோம்நாத் மாவட்டத்தின் நிலவியல்

கிர்சோம்நாத் மாவட்டம், குசராத்து மாநிலத்தின் மேற்கே, கத்தியவார் தீபகற்பத்தின் தென் மேற்கே, காம்பே வளைகுடா பகுதியில், அரபுக் கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரை மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கே போர்பந்தர். தெற்கே காம்பே வளைகுடா, மேற்கே அரபுக்கடல், கிழக்கே ஜூனாகாத் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

ஐந்து வருவாய் வட்டங்கள்

  • உனா வட்டம்
  • கொடினார் வட்டம்
  • சுத்ரபாதா வட்டம்
  • வேராவல் வட்டம்
  • தலாலா வட்டம்

மக்கள்தொகை

3,775 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள்தொகை 9,46,790 ஆகும் (2011, மக்கள்தொகை கணக்கெடுப்பு). இம்மாவட்டம் கொடிநார், உன்னா, தலாலா மற்றும் சுத்ரபாதா எனும் நான்கு நகராட்சிகளையும், 345 கிராமங்களையும் கொண்டது.[2]

கிர்சோம்நாத் மாவட்ட முதன்மைத் தொழில்கள்

சுற்றுலா, மீன் பிடித்தல், பெரிய மீன்பிடி படகுகள் கட்டுதல், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள், கடல்சார் உணவுகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தல், சிமெண்ட், வேதியல் பொருட்கள் மற்றும் செயற்கை நூல் உற்பத்தி தொழிற்சாலைகள் ஆகியவைகள் கிர்சோம்நாத் மாவட்டத்தின் முதன்மைத் தொழில்களாகும்.

கிர்சோம்நாத் மாவட்ட கடற்கரை

கிர்சோமநாத் மாவட்ட கடற்கரையில் உள்ள பிரபாச பட்டினம் வணிக நோக்கில் உள்ள சிறுபகுதி. இப்பகுதிகள் இன்றும் இளமையுடன் உள்ளது.

போக்குவரத்து

இரயில் இருப்புப்பாதை போக்குவரத்து

கிர்சோம்நாத் மாவட்டத் தலைமையிடமான வேராவல் ஒரு முதன்மையான தொடருந்து சந்திப்பு நிலையம் ஆகும். இந்நகரம் இருப்புப் பாதையால் நாட்டின் முதன்மையான பகுதிகளான அகமதாபாத், ராஜ்கோட், உஜ்ஜைன், வதோதரா, புனே, சென்னை, புதுதில்லி, போபால், மும்பை, ஜபல்பூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது.[3]

சாலைப் போக்குவரத்து

சோம்நாத், மாநிலத்தின் இதர முதன்மையான பகுதிகளான அகமதாபாத், ராஜ்கோட், சூரத்து, பவநகர், புஜ், ஜூனாகத், காந்திநகர் மற்றும் துவாரகை ஆகிய இடங்கள் சாலைப் போக்குவரத்து, பேருந்துகளால் இணைக்கப்பட்டுள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள்

மேற்கோள்கள்

உசாத்துணை

  • குசராத்து மாநில அரசின் இணையதளம்,
  • கிர் தேசியப் பூங்கா, ஆசிய சிங்கங்களின் உறைவிடம்
  • சோமநாதர் கோயில் இணையதளம்
  • குசராத்து மாநில அரசின் சுற்றுலா இணையதளம்
  • குசராத்தின் புதிய மாவட்டத்தில் மாநில முதல்வர்

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.