கிரீடம் (திரைப்படம்)

கிரீடம் 2007 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இதை இயக்கியவர் ஏ. எல். விஜய், இது இவரது முதல் படமாகும். இது மலையாளத்தில் சிபி மலயில் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெற்றி பெற்ற கிரீடம் என்ற படத்தின் தழுவலாகும். இதில் அஜித் குமார், திரிஷா, ராஜ்கிரண், விவேக், சந்தானம், சரண்யா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கிரீடம்
இயக்கம்ஏ. எல். விஜய்
இசைஜி. வி. பிரகாஷ்குமார்
நடிப்புஅஜித் குமார்
திரிஷா
ராஜ்கிரண்
விவேக்
படத்தொகுப்புஅந்தோனி
விநியோகம்ஜங்கரன் இண்டர்நேஷனல்
வெளியீடுசூலை 20, 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திரைக்கதை

நேர்மையான தலைமைக் காவலரான ராஜ்கிரண், தன் மகன் அஜீத் காவல்துறை அதிகாரியாக வேண்டும் என்று நினைக்கிறார். அப்பாவின் வாக்கை மதிக்கும் அஜித்தும் அப்படியே அதிகாரித் தேர்வுக்குத் தயாராகிறார். இதற்கிடையே அடாவடி செய்யும் தன் மகன் மீது ராஜ்கிரண் எடுக்கும் நடவடிக்கைகளால் ஆவேசமாகும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் தன் செல்வாக்கால் ராஜ்கிரணை கோடியக்கரைக்கு இடமாற்றம் செய்கிறார்.

குடும்பத்துடன் கோடியக்கரைக்குச் செல்லும் ராஜ்கிரண் அங்கு நடக்கும் ரவுடிகளின் அதிகாரத்தைக் கண்டு அதிர்கிறார். ஒரு பிரச்சினையில் ரவுடிகளை ராஜ்கிரண் தட்டிக்கேட்க அவரை அடிக்க வருகிறார்கள் அஜய்குமாரின் அடியாட்கள். இதைப் பார்த்து ஆவேசமாகும் அஜீத் அஜய்குமாரை அடித்து விடுகிறார். அப்பகுதி தாதாவாக அஜித்தை மக்கள் நினைக்க ஆரம்பிக்கிறார்கள். ஆனால் அடிதடியில் ஈடுபட்டதன் மூலம் எங்கே தன் மகன் கிடைக்க இருக்கும் காவல்துறை வேலையை கோட்டை விட்டுவிடுவானோ என்று ராஜ்கிரண் பதறுகிறார். அந்தப் பதற்றம் அஜித் மீது கோபமாக மாறுகிறது. இதற்கிடையே அஜய்குமார் அஜித்தை பழி தீர்க்க முயலுகிறான்.

பாடல்கள்

Untitled

ஐந்து பாடல்கள் மற்றும் ஒரு தீம் இசை கொண்ட இத்திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார்.

எண் தலைப்புபாடகர்(கள்) நீளம்
1. "அக்கம் பக்கம் "  சாதனா சர்கம் 5:12
2. "விழியில் உன் விழியில்"  சோனு நிகாம், சுவேதா மோகன் 4:38
3. "கனவெல்லாம்"  பி. ஜெயச்சந்திரன், கார்த்திக் 5:10
4. "கண்ணீர் துளியே"  விஜய் யேசுதாஸ் 5:20
5. "விளையாடு விளையாடு"  சங்கர் மகாதேவன் 4:09
6. "கிரீடம் இசை"  இசை 4:25
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.