கி. லோகநாதன்

முனைவர் கி. லோகநாதன் (11 ஆகத்து 1940 - 17 ஏப்ரல் 2015) மலேசியத் தமிழறிஞர். மலேசிய கல்வி அமைச்சிலும், பின்னர் மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தில் உளவியல் துறை பேராசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தமிழ் ஆய்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். சுமேரியத் தமிழ் ஆய்வுகளில் மிகுந்த நாட்டம் கொண்டவர்.[1] இவர் நியூசிலாந்தில் கணிதத் துறையில் பட்டம் பெற்று பின்னர் இங்கிலாந்தில் முனைவர் பட்டம் பெற்றார். சைவ சித்தாந்தத்தில் மிகுந்த ஆர்வமும் ஆழ்ந்த புலமையும் கொண்டவர். 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பல்வேறு சைவ சித்தாந்த வகுப்புக்களை நடத்தி வந்தார்.[1][2]

கி. லோகநாதன்
K. Loganathan
பிறப்புகிருஷ்ணன் லோகநாதன்
ஆகத்து 11, 1940(1940-08-11)
கெடா, மலேசியா
இறப்புஏப்ரல் 17, 2015(2015-04-17) (அகவை 74)
மலேசியா
தேசியம்மலேசியர்
பணிஉளவியத் துறைப் பேராசிரியர்
பணியகம்மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுதமிழறிஞர், சுமேருத் தமிழ் ஆய்வாளர்
பட்டம்முனைவர்
வாழ்க்கைத்
துணை
டாக்டர் சாரா
பிள்ளைகள்டாக்டர் நவீனா,
டாக்டர் அருணன்
வலைத்தளம்
https://sites.google.com/site/ulaganaar/

மறைவு

முனைவர் லோகநாதன் மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ்டவுனில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் 2015 ஏப்ரல் 17 அன்று தனது 74வது அகவையில் காலமானார்.

மேற்கோள்கள்

  1. "சைவ சித்தாந்த உரைகள்". தமிழ் மரபு அறக்கட்டளை (01 டிசம்பர் 2008). பார்த்த நாள் 19 ஏப்ரல் 2015.
  2. திவாகர் (6 மே 2013). "இந்த வார வல்லமையாளர்!". வல்லமை (மின்னிதழ்). பார்த்த நாள் 19 ஏப்ரல் 2015.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.