வல்லமை (மின்னிதழ்)

வல்லமை என்பது ஒரு தமிழ் இணைய இதழ் ஆகும். இவ்விதழ் முனைவர் அண்ணாகண்ணன் அவர்களால் தொடங்கப்பட்டது. இவ்விதழில் இலக்கியம், சமூகம், அரசியல், அறிவியல், பொதுநலம், நுண்கலைகள் ஆகிய தலைப்புகளில் நிகழ்வுகள், கட்டுரைகள், கதைகள், நேர்காணல்கள் ஆகியன இடம்பெறுகின்றன.

வல்லமை
துறை பல்சுவை
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: பவளசங்கரி திருநாவுக்கரசு
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகத்தார் வல்லமை
வெளியீட்டு இடைவெளி: இணைய இதழ்
குறியிடல்
ISSN இதழ் இணைய இதழ்

இதழின் நோக்கமும் செல்நெறிகளும்

உலகளாவிய தமிழர்களின் தேவைகளை முழுமையாக நிறைவுசெய்து, அவர்களின் சிந்தனைகளைக் கூர்மைப்படுத்துவது, தமிழ்த் தரவுகள் அனைத்தையும் கூடிய வரை திரட்டிச் சேமிப்பது ஆகியவை, வல்லமை இணைய இதழின் முதன்மை நோக்கங்கள்.

நடுநிலை ஆய்வு, கருத்துச் சுதந்திரத்தைக் காத்தல், அறிவியல்பூர்வமான அணுகுமுறை, நுட்பியல் பயன்பாடு, இயன்ற வரை கலப்பில்லாத் தமிழ், புதிய முயற்சிகளுக்கு ஊக்கம், பரிசோதனை முயற்சிகளுக்குத் தூண்டுதல், அனுபவங்களை ஆவணப்படுத்துவதில் அக்கறை உள்ளிட்டவை இவ்விதழின் செல்நெறிகள்.

வல்லமையாளர் விருது

இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, வல்லமை ஆசிரியர் குழுவினால் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்பாளிகளுக்கு வாரம் தோறும் "வல்லமையாளர் விருது" வழங்கி கௌரவித்து வருகிறது. ஐக்கியா நிறுவனத்துடன் இணைந்து விருது பெற்ற படைப்பாளிகளுக்குப் பரிசுகளையும் வழங்கி வருகிறது.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.