காரன்வாலிஸ்
சார்லஸ் காரன்வாலிஸ் (Charles Cornwallis, 1st Marquess Cornwallis), பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பெனியின் வங்காள மாகாணத்தின் தலைமை ஆளுநராக 1786 முதல் 1793 முடிய பணிபுரிந்தவர்.[1][2] மேலும் பிரித்தானியப் பேரரசின் சார்பாக, ஏழாண்டுப் போர், அமெரிக்கப் புரட்சிப் போர் மற்றும் மூன்றாவது ஆங்கில மைசூர் போர்களில் கலந்து கொண்டு போரிட்டவர்.
ஜெனரல் காரன்வாலிஸ் | |
---|---|
![]() | |
1795ல் காரன்வாலிசின் ஓவியம் | |
இந்தியத் தலைமை ஆளுநர், வில்லியம் கோட்டை, வங்காள மாகாணம் | |
பதவியில் 12 செப்டம்பர் 1786 – 28 அக்டோபர் 1793 | |
அரசர் | மன்னர் மூன்றாம் ஜார்ஜ், ஐக்கிய இராச்சியம் |
பிரதமர் | ஜூனியர் வில்லியம் பிட் |
முன்னவர் | சர் ஜான் மெக்பெர்சன்(தற்காலிக இந்தியத் தலைமை ஆளுநர்) |
பின்வந்தவர் | சர் ஜான் சோர் |
பதவியில் 30 சூலை 1805 – 5 அக்டோபர் 1805 | |
அரசர் | மன்னர் மூன்றாம் ஜார்ஜ் |
பிரதமர் | வில்லியம் பிட், ஜூனியர் |
முன்னவர் | ரிச்சர்டு வெல்லஸ்லி |
பின்வந்தவர் | சர் ஜார்ஜ் பார்லோ தற்காலிகத் தலைமை ஆளுநர் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | ஐந்தாம் சார்லஸ் எட்வர்டு காரன்வாலிஸ் திசம்பர் 31, 1738 மேபேர், லண்டன், இங்கிலாந்து |
இறப்பு | 5 அக்டோபர் 1805 66) காஜிப்பூர் காசி நாடு | (அகவை
தேசியம் | பிரித்தானியப் பேரரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | ஜெமிமா துல்லேகின் ஜோன்ஸ் |
பிள்ளைகள் | மேரி |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஈடன் கல்லூரி கிளேர் கல்லூரி, கேம்பிரிட்ச் |
பணி | இராணுவப் படைத்தலைவர் |
சமயம் | Church of England |
விருதுகள் | திருத்தகை (Knight) |
கையொப்பம் | ![]() |
படைத்துறைப் பணி | |
பற்றிணைவு | ![]() ![]() |
கிளை | ![]() ![]() |
பணி ஆண்டுகள் | 1757–1805 |
தர வரிசை | தலைமைப் படைத்தலைவர் |
படைத்துறைப் பணி | தலைமைப் படைத்தலைவர், பிரித்தானிய இந்தியா & தலைமைப் படைத்தலைவர் அயர்லாந்து |
சமர்கள்/போர்கள் | ஏழாண்டுப் போர் அமெரிக்கப் புரட்சிப் போர் மூன்றாவது ஆங்கில மைசூர் போர் அயர்லாந்து கிளர்ச்சி, 1798 |
பிரித்தானிய இந்தியாவில் நிலையான நிலவரித் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். ஜார்ஜ் பார்லே எனும் சக அதிகாரியின் துணையுடன் சட்டத்தொகுப்பை உருவாக்கினார். சர் வில்லியம் ஜோன்ஸ் என்பரின் உதவியுடன் நீதித் துறையை சீரமைத்தார். குற்றவியல் வழக்குகளில் இந்துச் சட்டங்கள் கடைபிடிக்கப்பட்டது.
மாவட்ட அளவில் இருந்த இந்திய நீதிபதிகள் மாவட்ட முன்சிப் என அழைக்கபப்ட்டனர். சதர், திவானி, அதாலத், எனும் உரிமையியல் மற்றும் சதர் நிசாமத் அதாலத் எனும் குற்றவியல் உயர்நீதிமன்றம் கல்கத்தாவில் அமைக்கப்பட்டது. ஆட்சிப் பணி நியமனங்களில் தகுதி மட்டும் கருத்தில் கொள்ளப்பட்டது.
காரன்வாலிஸ் 1789ல் கிழக்கிந்தியப் படைகளுடன் மராத்தியர் மற்றும் ஐதராபாத் படைகளுடன் இணைந்து, மைசூரின் திப்பு சுல்தானைக்கு எதிராக கூட்டமைப்பு உருவாக்கினார். மூன்றாம் மைசூர் போரில், தோல்வியடைந்த திப்புவிடமிருந்து, பெங்களூர், திண்டுக்கல் மற்றும் மலபார் பகுதிகளையும், போர் ஈட்டுத் தொகையும் பெற்றார்.