காட்டுவகை
காட்டுவகை (Wild type) என்பது இயற்கையில் இனவிருத்திக்கு உட்படும் ஒரு இனத்தின், மாதிரிச் சிறப்பியல்புகளையுடைய தோற்றவமைப்பைக் கொண்டிருக்கும் உயிரினம் ஆகும். மாற்றங்களுக்கு உட்பட முன்னர், இயற்கையில் தனது இயல்புமாறா நிலையிலேயே இவை காணப்படும். இவற்றின் மரபணுக்கள் அவற்றின் ஆரம்ப இயற்கை நிலையிலிருந்து மாறுதலற்றதாக இருக்கும்.

காட்டுவகைகள் பற்றிய அறிவு மரபியல், மரபணு திடீர்மாற்றம் தொடர்பான ஆய்வுகள் பற்றிய அறிவியலில் மிகவும் உதவியாக இருக்கும். விரும்பத்தக்க இயல்புகளைக் கொண்ட காட்டுவகை தாவரங்களில் இருந்து, பயிர்ச்செய்கை மூலம், குறிப்பிட்ட இயல்புகளைத் தெரிவு செய்து, தொடர்ந்து வரும் சந்ததிகளில், பயிரிடும்வகையைப் பெறலாம். பழ ஈ இனமான Drosophila melanogaster பல ஆய்வுகளில் பயன்படுத்தப்படும் ஒரு இனமாகும். இவற்றில் கண் நிறம், உருவம், சிறகுகளின் அமைப்பு போன்ற சில வெளித்தோற்ற இயல்புகள், குறிப்பிட்ட மரபணுவில் ஏற்படுத்தப்படும் மாற்றங்களால் மாற்றப்படக் கூடியனவாக இருக்கும்.
படத்தொகுப்பு
- காட்டுவகை தக்காளி
- முட்டைக்கோசு இனத்தின் காட்டுவகை
- காட்டுவகை காதல் குருவிகள் (Love birds)