காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை
காஞ்சிபுரம் நாயினாப் பிள்ளை (இறப்பு: 1934) என்று அறியப்பட்ட காஞ்சீவரம் சுப்ரமணிய பிள்ளை தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.
இசைப் பயிற்சி
- இவரின் அத்தை, காஞ்சீவரம் தனகோடி எனும் அக்காலத்து புகழ்மிக்க பாடகர் ஆவார். இவரிடமிருந்து பல தமிழ்ப் பாடல்களை நயினாப் பிள்ளை கற்றார்.
- எட்டயபுரத்தைச் சேர்ந்த இராமச்சந்திர பாகவதரிடம் அரிய பல இராகங்களைக் கற்றார்.
- சியாமா சாஸ்திரியின் மாணாக்கர்களிடமிருந்து நேரடியாக பாடம் கற்றவர் 'மெட்டு' காமாட்சி என்பவர். இவர் நயினாப் பிள்ளையின் முன்னோராவார். இவரிடமிருந்து சியாமா சாஸ்திரியின் பாடல்கள் பலவற்றை நயினாப் பிள்ளை கற்றுக் கொண்டார்.
- 'ஜலதரங்கம்' ரமணய்யா செட்டி என்பவரிடமிருந்து தியாகராஜ கீர்த்தனைகள் பலவற்றைத் தெரிந்துகொண்டார்.
- வீணை தனம்மாளின் கற்பித்தலிலும் இவர் இசை பயின்றுள்ளார்.
இசைப் பணி
பல்லவி பாடுவதில் இவர் புகழ்பெற்றவர். வயலின், மிருதங்கம், கொன்னக்கோல், கடம், மோர்சிங், கஞ்சிரா, தோலக், கோட்டு வாத்தியம் எனும் பக்கவாத்தியங்களுடன் இசைக் கச்சேரிகளை நடத்தியுள்ளார்.
மாணாக்கர்கள்
- டி. பிருந்தா
- டி. முக்தா
- சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை
மறைவு
எலும்புருக்கி, இரத்தச் சர்க்கரை நோய்களின் காரணமாக மே 3, 1934 அன்று காலமானார். அப்போது அவருக்கு வயது 46.
சிறப்பு
காஞ்சிபுரத்தில் நாயினாப் பிள்ளை வாழ்ந்த தெருவிற்கு சங்கீத வித்வான் நாயினாப் பிள்ளை தெரு என பெயர் சூட்டப்பட்டது. அந்தத் தெரு இப்போது எஸ். வி. நாயினா தெரு என அழைக்கப்படுகிறது.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.