கொன்னக்கோல்

கொன்னக்கோல் (konnakol) என்பது கருநாடக இசையில் பயன்படுத்தப்படும் ஒரு உப பக்க வாத்தியம். இதற்கு கலைஞர்களின் குரலே இசைக்கருவி ஆகும். அதாவது வாயால் உச்சரிக்கப்படும் தாளலயம் அல்லது வாயால் சொற்கட்டுகளுடன் வாசிப்பது கொன்னக்கோல் எனலாம்.

கொன்னக்கோல் என்றால் அளவுடன் சொல்வது என்று பொருளாகிறது. கொன்னம், அல்லது கொன்னப்பித்தல் என்றால் சொல்லுவது என்று பொருள். எதை, எங்கு, எப்படி அளவுடன் சொல்வது என்பதே இக்கலையின் அடிப்படையாகும்.

ஒரு இசைக் கச்சேரியின் சுவையை மேலும் மெருகூட்டுவதற்காகவே பிரதான பக்கவாத்தியத்துடன் கடம், கஞ்சிரா, மோர்சிங், கொன்னக்கோல் போன்ற உப பக்கவாத்தியங்கள் அவசியமாகின்றன. வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் பல்லவியை பாடி முடிக்கும் தருணத்தில் அவருடன் இணைந்து தாளலயத்துடன் கொன்னக்கோல் சொல்வார்கள்.

தனி ஆவர்த்தனத்தில் கொன்னக்கோல்

கருநாடக இசைக்கச்சேரியில் முக்கிய இடம் வகிப்பது தனி ஆவர்த்தனம் ஆகும். இதன்போது கொன்னக்கோலே முக்கிய வாத்தியமாக இருந்தது. தனி ஆவர்த்தனத்தின் போது கொன்னக்கோல் சொல்லத் தொடங்கிய பின்பு தான் மிருதங்கம், கடம், கஞ்சிரா, மோர்சிங், தவில் ஆகியவை வாசிக்கப்படும் சூழல் முன்பு இருந்தது.

வரலாறு

கொன்னக்கோல் என்ற கலையின் பிறப்பிடம் நட்டுவாங்கம் ஆகும். ஆனாலும், நட்டுவாங்கத்தில் பிரயோகிக்கப்படும் பல்வேறு தாளக்கட்டுச் சொற்கள் கொன்னக்கோலில் இடம்பெறுவதில்லை. அதே வேளையில் கொன்னக்கோலுக்கென்று தனித்துவம் மிக்க சொற்கட்டுகள் இருக்கின்றன. அதனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக தவிலில் பயன்படுத்தப்படும் "ப்ளாங்.." என்ற சொற்கட்டு, கொன்னக்கோலில் சொல்லக்கூடாது. இக்கலையை புதுப்பித்த திருச்சி தாயுமானவன் என்ற கலைஞர், தன்னுடைய கொன்னக்கோலில் "ஓம்" என்ற ஒலிக்குறிப்பு இறுதியில் ஒலிக்கும் படி செய்கிறார். இவை விதிக்கு உட்பட்டிருப்பதால் இசை ஆர்வலர்களும், இசை விமர்சகர்களும் வரவேற்றுள்ளனர். புதுவித சொற்கட்டுகளை இதில் இணைப்பதற்கு பாரம்பரிய வாய்ப்பாட்டுக் கலைஞர்கள் ஒப்புக்கொள்வதில்லை.

கொன்னக்கோல் கலைஞர்கள்

உசாத்துணை

  • கோபி, ஆர்., அழிந்து வரும் கொன்னக்கோல் கலை, வீரகேசரி, சூலை 9, 2011

வெளி இணைப்புகள்

தொகு தமிழிசைக் கருவிகள்
தோல் கருவிகள் ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
நரம்புக் கருவிகள் வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம்
காற்றுக் கருவிகள் கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம்
கஞ்சக் கருவிகள் தாளம் | சேகண்டி |
பிற கொன்னக்கோல் | கடம் |
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.