கலாப்ரியா

கலாப்ரியா (பிறப்பு: சூலை 30, 1950) தமிழின் நவீன கவிஞர்களில் குறிப்பிடத்தக்கவர். எழுபதுகளில் எழுதத் தொடங்கியவர்.

கலாப்ரியாவின் இயற்பெயர் சோமசுந்தரம். சிறு வயதில் எம்.ஜி.ஆர் ரசிகனாய் தி. மு. க தொண்டனாக தீவிரமாக இயங்கினார்.

அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே 'கலாப்ரியா' என்று பெயர் சூட்டிக்கொண்டார். பின்னர் கசடதபறவில் கவிதைகள் வெளிவரும்போது கூர்ந்து கவனிக்கப்பட்டார். கசடதபறவிற்கு பின் வானம்பாடி, கணையாழி, தீபம் ஆகிய இதழ்களில் எழுதினார். கலாப்ரியாவின் கவிதைகளில் பாலுணர்வு வெளிப்பாடுகளும் சில வேளைகளில் வன்முறையும் கொஞ்சம் தூக்கலாக இருக்கிறது என்று சிலரும், இது அவரது கவிதை மாந்தர்கள் வாழ்வை ஒட்டியது என்று சிலரும் கருதுவதுண்டு{பேராசிரியர் தமிழவன் படிகள் இதழில் எழுதிய கட்டுரை, ஜெயமோகன், கலாப்ரியா கவிதைகள் தொகுப்புக்கு எழுதியுள்ள முன்னுரைகள்}.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வங்கிப் பணி நிறைவு பெற்றவர். தன்னை சுற்றி நிகழும் விஷயங்களை கவிதைகளில் பதிவு செய்து வருகிறார் 'கலாப்ரியா'.

படைப்புகள்

வரிசை எண்வெளியான ஆண்டுநூலின் பெயர்வகைபதிப்பகம்குறிப்புகள்
011973வெள்ளம்கவிதை
021973தீர்த்தயாத்திரைகவிதை
031980மற்றாங்கேகவிதைவாசகசாலை
041082எட்டயபுரம்கவிதைஅன்னம், சிவகங்கைபாரதியார் நூற்றாண்டு வெளியீடு
051985சுயம்வரம் மற்றும் கவிதைகள்கவிதை
061993உலகெல்லாம் சூரியன்கவிதை
071994கலாப்ரியா கவிதைகள்கவிதை1994 வரை வெளிவந்த கவிதைத்தொகுப்புகளின் தொகுப்பு. இதன் மறுபதிப்பு 2000 ஆம் ஆண்டில் வெளிவந்தது
082000அனிச்சம்கவிதை
092003வனம் புகுதல்கவிதை
102008எல்லாம் கலந்த காற்றுகவிதை
112009நினைவின் தாழ்வாரங்கள்கட்டுரைத் தொகுப்பு
122010ஓடும் நதிகட்டுரைத் தொகுப்பு
132010கலாப்ரியா கவிதைகள் - பேட்டிகள், திறனாய்வுகள், கருத்துகள் உள்ளடக்கியது
142011உருள் பெருந்தேர்கட்டுரைத் தொகுப்பு
152011நான் நீ மீன்கவிதைகள்
162013உளமுற்ற தீகவிதைகள்
172013சுவரொட்டிகட்டுரைத் தொகுப்பு
182014காற்றின் பாடல்கட்டுரைத் தொகுப்பு
192015மறைந்து திரியும் நீரோடைகட்டுரைத் தொகுப்பு
202015தண்ணீர்ச் சிறகுகள்கவிதைகள்
212016!தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி!கவிதைகள்!டிஸ்கவரி புக் பாலஸ்
222016சொந்த ஊர் மழைகவிதைகள்நற்றிணை பதிப்பகம்
232016பனிக்கால ஊஞ்சல்கவிதைகள்உயிர்மை பதிப்பகம்
242016மையத்தைப் பிரிகிற நீர் வட்டங்கள்கட்டுரைத் தொகுப்புசந்தியாபதிப்பகம்
252016என் உள்ளம் அழகான வெள்ளித்திரைகட்டுரைத் தொகுப்புசந்தியா பதிப்பகம்
262016சில செய்திகள் சில படிமங்கள்கட்டுரைத் தொகுப்புசந்திய பாதிப்பகம்
272016போகின்ற பாதையெல்லாம் பூமுகம் காணுகின்றேன்கட்டுரைத் தொகுப்புஅந்திமழை பதிப்பகம்
28 2017 பேனாவுக்குள் அலையாடும் கடல் கவிதைகள் டிஸ்கவரி புக் பாலஸ்
29 2017 வேனல் நாவல் சந்தியா பதிப்பகம் முதல் நாவல்
30 2018 வானில் விழுந்த கோடுகள் சிறுகதைகள் சந்தியா பதிப்பகம்
31 2018 சொல் உளி கவிதைகள் சந்தியா பதிப்பகம்
32 2018 பாடலென்றும் புதியது தமிழ் சினிமா பற்றிய் கட்டுரைகள் சந்தியா பதிப்பகம்

விருதுகள்

  • தமிழக அரசின் கலைமாமணி விருது
  • கவிஞர் சிற்பி இலக்கியவிருது
  • ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை
  • சிறந்த கட்டுரைத் தொகுப்பு - நினைவின் தாழ்வாரங்கள் - விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010)
  • கண்ணதாசன் இலக்கியவிருது - கோவை - 2012
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - உருள் பெருந்தேர்- உரைநடை/புதினம்- 2012
  • கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
  • கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
  • வைரமுத்துவின் கவிதைத் திருவிழாவில் சிறப்பிக்கப்பட்டது.
  • தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் வழங்கும் பட்டயம் மற்றும் ரூபாய் ஒருலட்சம் அடங்கிய கலைஞர் மு.கருணாநி பொற்கிழி விருது - 2017
  • திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளி வழங்கும் “அறிஞர் போற்றுதும்” விருது -2017
  • திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அடங்கிய மனோன்மணியம் சுந்தரனார் விருது - 2017[1]( 12.10.2018 அன்று வழங்கப்பட்டது)
  • கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டம் வழங்கும் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் அடங்கிய “ஜெயகாந்தன் விருது” - 2018

மேற்கோள்கள்

  1. http://www.dinamalar.com/news_detail.asp?id=2119732
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.