கரியன் காகம்

கரியன் காகம் (Carrion Crow), கோர்வஸ் கொரோனேயை Raven இலிருந்து அதன் அளவாலும், Hooded காகத்திலிருந்து அதன் உடல் நிறத்தாலும் வேறுபடுத்தி அறியமுடியும். எனினும், இதற்கும் Rookக்குமிடையே வேறுபாடு காண்பதில் அடிக்கடி குழப்பம் உண்டாவதுண்டு. காகத்தின் சொண்டு கனமானதாக இருப்பதால் கட்டையாகத் தோற்றும். முதிர்ந்த Rook இல் மூக்குத் துவாரம் வெறுமையாக இருக்கும், ஆனால் காகத்தில் அதன் எல்லா வயதிலும் மூக்குத்துவாரம் தும்பு போன்ற இறகுகளினால் மூடப்பட்டிருக்கும்.

பரவலைக் காட்டும் உலகப்படம்
கரியன் காகம்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: passerine
குடும்பம்: Corvidae
பேரினம்: Corvus
இனம்: C. corone
இருசொற் பெயரீடு
Corvus corone
L, 1758
கரியன் காகம் பரவல்

இந்த வகை, கிழக்காசியாவில் காணப்படும், தொடர்புள்ள C. c. ஒரியெண்டலிஸ் உடன், மேற்கு மற்றும் மத்திய ஐரோப்பாவில் வாழுகின்றது. இந்த இரண்டு வகைகளுக்கிடையிலான பிரிவு கடைசி பனி உலகில் இடம் பெற்றதாக நம்பப்படுகின்றது. இவையிரண்டுக்குமிடையிலான இடைவெளியை, நெருக்கமான தொடர்புள்ள Hooded Crow (தற்போது தனி "வகை" அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது) நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டு வடிவங்களுக்குமிடையிலான எல்லைகளில், இவற்றுக்கிடையிலான கலப்பினங்கள் உருவாவது, இவை இரண்டுக்குமிடையிலான பரம்பரையியல் தொடர்புகளைக் காட்டுகின்றது.

கரியன் காகத்தின் உடல் நிறம், பச்சை அல்லது ஊதாப் பளபளப்புடன் கூடிய கறுப்பாகும். ஆனால் பளபளப்பு பனி யுகம்Rook இலும் கூடிய பச்சையானது. சொண்டு, கால்கள், பாதங்கள் என்பனவும் கறுப்பு நிறமே.

Rook பொதுவாகச் சேர்ந்து வாழ்வது. கரியன் காகம் தனிமையில் வாழ்வது. ரூக்குகள் எப்போதாவது தனியான மரங்களில் கூடு கட்டுகின்றன. காகங்கள் Rookகுகளுடன் சேர்ந்து உணவுண்ணக்கூடும். மேலும், காகங்கள் குளிர்காலத் தங்குமிடங்களில் சேர்ந்து வாழுகின்றன. இவற்றிடையே முக்கிய வேறுபாடு இவற்றின் குரலாகும். Rookகுகள் "கா" என்று கரைய, காகங்கள் pawk, pawk என்று சத்தம் எழுப்புகின்றன. அடித்தொண்டையிலிருந்து வரும் சிறிது அதிர்வுள்ள சத்தம், Rookகுகளின் சத்தங்களிலிருந்து வேறானது.

இப் பறவை அதிகம் சத்தம் எழுப்பிக்கொண்டிருப்பது. மரக்கிளையில் இருந்துகொண்டு தொடராகக் கரையும். ஒரு தொடரில் விரைவாக அடுத்தடுத்து மூன்று அல்லது நான்கு முறை ஒலியெழுப்பும், அடுத்தடுத்த தொடர்களிடையே சிறிது இடைவெளியிருக்கும். சிறகடிப்பு, ரூக்இன் சிறகடிப்பைக் காட்டிலும் மெதுவாகவும், நிதானமானதாகவும் இருக்கும்.

எல்லாவித அழுகும் உடல்களையும் தின்னும் வழக்கமுள்ளதாயினும், அதனால் பிடிக்கக்கூடிய சிறிய விலங்குகளைக் கொன்றும் தின்னக்கூடியது, அத்துடன் முட்டைகளைத் திருடித் தின்பதையும் வழக்கமாகக் கொண்டது. காகங்கள் இயற்கையில் தோட்டிகள், இதனால்தான், வீட்டுக் கழிவுகளை உண்பதற்காக மனிதர்கள் வாழும் இடங்களில் அடிக்கடி காணப்படுகின்றன.

மலையுச்சிகளின் தொங்குபாறைகளில் இவை கூடுகட்டுகின்றன, ஆனால் உள்நாடுகளில் மரங்களிலேயே கூடுகளை அமைக்கின்றன. இக் கூடுகள் raven களுடையதிப் போலவே இருந்தாலும், அளவிற் சிறியவை. நான்கு முதல் ஐந்து வரையிலான முட்டைகளைப் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னரே இடுகின்றன. முட்டைகள், நீல அல்லது பச்சைப் பின்னணியில் மண்ணிறப் புள்ளிகளைக் கொண்டவையாக உள்ளன. முட்டையிலிருந்து வெளிவந்து ஆறு வாரகாலத்துக்குள், குஞ்சுகள் சிறகு முளைத்துப் பறக்கத் தயாராகிவிடுகின்றன.

முன்னைய வருடங்களில் பொரித்த குஞ்சுகள் அவ்விடத்திலேயே இருந்து புதிய குஞ்சுகளை வளர்க்க உதவுகின்றன. அவை உணவு சேகரித்துக் குஞ்சுகளுக்குக் கொடுப்பதில் பெற்றோருக்கு உதவுகின்றன.

புகைப்பட இணைப்புகள்:

மேற்கோள்கள்

  1. BirdLife International (2004). Corvus corone. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 5 May 2006.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.