மஞ்சள் முள்ளங்கி

மஞ்சள் முள்ளங்கி (காரட், கரட், கேரட்) எனப்படுவது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.

காரட்
அறுவடை செய்த காரட்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூப்பன
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Asterids
வரிசை: Apiales
குடும்பம்: அப்பியாசெயீ (Apiaceae)
பேரினம்: டௌக்கசு(Daucus)
இனம்: D. carota
இருசொற் பெயரீடு
டௌக்கசு காரோட்டா, Daucus carota
L.
காரட், பச்சையாக
100 கிராமில் உள்ள ஊட்டச் சத்து
ஆற்றல் 40 kcal   170 kJ
மாப்பொருள்     9 g
- சர்க்கரை  5 g
கொழுப்பு0.2 g
புரதம் 1 g
உயிர்ச்சத்து ஏ  835 μg93%
தயமின்  0.04 mg  3%
ரிபோஃபிளாவின்  0.05 mg  3%
நியாசின்  1.2 mg  8%
உயிர்ச்சத்து பி6  0.1 mg8%
உயிர்ச்சத்து சி  7 mg12%
கால்சியம்  33 mg3%
இரும்பு  0.66 mg5%
மக்னீசியம்  18 mg5% 
பாசுபரசு  35 mg5%
பொட்டாசியம்  240 mg  5%
சோடியம்  2.4 mg0%
ஐக்கிய அமெரிக்கா அரசின்
வயதுக்கு வந்தவருக்கான,
உட்கொள்ளல் பரிந்துரை .

மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A-வாக (vitamin A) மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய்த் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

படங்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.