கடற்சாமந்தி

கடற்சாமந்தி (ஒலிப்பு ) (sea anemone) என்பது கொன்றுண்ணல் முறையால் தமது உணவைப் பெற்று, கடலில் வாழும் விலங்கு ஆகும். இவை பார்ப்பதற்கு சாமந்தி மலரைப் போன்று இருப்பதால் கடற்சாமந்திகள் என்று அறியப்படுகின்றன. இவை பவளப் பாறைகள், கடல் இழுதுகள், ஐட்ரா போன்ற பாலிப் (polyp) வகையான உயிரினங்களோடு மரபியல் ரீதியான தொடர்புடையவை. இவை ஒரு செ.மீ. முதல் இரண்டு மீட்டர் வரையிலும் வளரக்கூடியன. இவற்றிற்கு குழாய்கள் போன்ற இதழ்கள் கொண்டு உடலின் நடுப்பகுதியில் உள்ள வயிறு இணைந்திருப்பதால் தனது வண்ணமயமான இதழ்களால் தனது இரையை கவர்ந்து இழுத்து பின்னர் திரவத்தை பீய்ச்சி அடித்து அப்படியே விழுங்கிவிடுகிறன. ஆண் உறுப்புகளும், பெண் உறுப்புகளும் ஒருசேர கொண்டு கடற்சாமந்தி இருபால் உயிரினமாக விளங்குகின்றது.

கடற்சாமந்தி
பல்வேறு கடற்சாமந்தி இனங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: நிடேரியா
வகுப்பு: பூ விலங்குகள்
துணைவகுப்பு: Hexacorallia
வரிசை: Actiniaria
Suborders
  • Enthemonae
  • Anenthemonae
உயிரியற் பல்வகைமை
46 குடும்பங்கள்
பல வகை கடல் சாமந்திகள்

இவை பாசிகள், கடல் குதிரை, கடல் பஞ்சு, சிறிய மீன்கள், இறால், நண்டுகள் போன்றவற்றிற்கு தஞ்சம் அளிக்கின்றன. மேலும் கடற்சாமந்தியில் இருந்து மருந்துகள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.[1]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.