ஓமந்தை

ஓமந்தையானது இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் அரச மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி அமைந்துள்ளது. இது புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணியில் இருந்து மாலை 5:30 வரை திறந்திருக்கவேண்டும் எனினும் தற்போது எல்லாக் கிழைமையில் நாட்களிலும் காலை 9 மணியில் இருந்து மாலை 17:30 மணிவரையே திறந்திருக்கும்.

ஓமந்தை
நகரம்
Countryஇலங்கை
ProvinceNorthern
DistrictVavuniya
DS DivisionVavuniya South (Tamil)

6 அக்டோபர் 2007 இலங்கைப் பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட சுற்றுநிருபப்படி அனைத்து ஆபத்துவி பணி ஊர்திகள் (ஐக்கிய நாடுகள் விசேட அமைப்புக்கள், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு மற்றும் யாவும் பன்னாட்டு அமைப்பு வாகனங்களும் வவுனியா கண்டிவீதியில் தேக்கவத்தையில் உள்ள ரம்யா இல்லத்தில் (ரம்யா ஹவுஸ்) பதிவினை மேற்கொண்டால் மாத்திரமே மேற்கொண்டு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குப் பிரவேசிக்க இயலும். இப்பதிவில் செல்பவர்களின் விவரம், அடையாள அட்டை விபரங்கள், பிரயாணத்தை மேற்கொள்ளும் திகதி மீள்திரும்பும் திகதி ஆகியவற்றும் வாகன இலக்கம் (இயந்திர இலக்கம், அடிச்சட்ட இலக்கம் உட்பட) விபரங்களை வன்னிக் கட்டளைப் பிரிவில் உள்ள மேஜர் பண்டாரவிற்குச் சமர்பிக்கப்படவேண்டும் அல்லது 211 கட்டளைப் பிரிவின் மேஜர் ஜயத்திலகவிற்கு ஆகக்குறைந்தது ஒருநாள் முன்னராகவே மத்தியானம் 12:00 முன்னராகச் சமர்பிக்கப்படவேண்டும். இவ்வாறு விபரங்களை சமர்பித்தால் அன்றி எந்தப் பன்னாட்டு அமைப்பினரும் ஓமந்தையூடாக விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் செல்ல இயலாது.

மனித உரிமை மீறல்கள்

  1. இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப் பகுதியில் இருந்து வவுனியா வருவர்களை விசாரித்து விட்டு சந்தேகமானவர்கள் எனக் கூறிக்கொண்டு பணம் பறிக்கும் நோக்குடன் தமிழ்ர்களைப் போகவிட்டு பின்னர் தாண்டிக்குளம் வளைவுப் பகுதியில் வைத்து (விவசாயக் கல்லூரிக்கு அருகில்) இரகசியமான முறையில் கடத்துகின்றனர்.
  2. விடுதலைப் புலிகளிடம் அனுமதி இன்றி எவரும் அவர்களின் கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு வரமுடியாது உள்நுளைபவர்களும் அனுமதி பெற்றுத்தான் நுளையலாம். இது சாதாரண மக்கள் மாத்திரம் அன்றி அமைப்பு ஊழியர்களுக்கும் இந்நடைமுறை உண்டு.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.