ஒராதேயா

ஒராதேயா (அங்கேரியம் Nagyvárad, இடாய்ச்சு Großwardein) என்பது உருமேனியா நாட்டில் திரான்சில்வேனியாவிலுள்ள பிஹோர் கவுண்டியைச் சேர்ந்த ஒரு நகரமாகும். 2002 ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நகரத்தில் 206,527 பேர் உள்ளனர். இது மாநகரசபைக்கு வெளியேயுள்ள பகுதிகளை உள்ளடக்கவில்லை. இப் பகுதிகளையும் சேர்த்தால் மொத்த நகர் சார்ந்த மக்கள் தொகை அண்ணளவாக 220,000 ஆகும். ஒரேடெயா ருமேனியாவின் மிகவும் வளம் பொருந்திய நகரங்களில் ஒன்றாகும்.

ஒராதேய நகர மண்டபம்

புவியியல்

இந்த் நகரம் ஹங்கேரிய எல்லையை அண்டி கிரிசுல் ரெபேடே(Crişul Repede) நதிக்கரையில் அமைந்துள்ளது.

வரலாறு

வராடியம் என்னும் லத்தீன் மொழிப் பெயரில், 1113 இல் முதல் முதலாக ஒராடெயா குறிப்பிடப்படுகின்றது. இன்றும் அழிந்த நிலையில் காணப்படும் ஒராடெயா Citadel 1241ல் முதல் தடவையாகக் குறிப்பிடப்படுகின்றது, எனினும் 16 ஆம் நூற்றாண்டின் பின்னரே இப்பகுதி ஒரு நகராக வளரத்தொடங்கியது. 1700 ல் வியன்னாவைச் சேர்ந்த பொறியியலாளரான பிரான்ஸ் அன்டன் ஹில்லெபிராண்ட் (Franz Anton Hillebrandt) பரோக் பாணியில் நகரத்தை வடிவமைத்தார். 1752லிருந்து ரோமன் கத்தோலிக்க தேவாலயம், பேராயர் மாளிகை, கிரிஸ்(Criş) மண்ணின் அரும்பொருட் காட்சியகம் (Muzeul Ţării Crişurilor) போன்ற முக்கிய கட்டிடங்கள் கட்டப்பட்டன.

பொருளாதாரம்

ஹங்கேரிய எல்லையில் மேற்கு ஐரோப்பாவுக்கான நுழைவாயிலில் அமைந்திருந்ததால் ஒராடெயா நீண்ட காலமாகவே ருமேனியாவின் வளமிக்க ஒரு நகரமாக விளங்கி வந்தது. 1989 இன் பின்னர் ஒராடெயா, தொழில் வளர்ச்சி அடிப்படையிலன்றிச் சேவைத்துறை வளர்ச்சிமூலம் ஓரளவு பொருளாதாரப் புத்துயிர் பெற்றது.

ஒராடெயாவின் வேலையின்மை விகிதமான 6%, ருமேனியாவின் சராசரியைவிடக் குறைவாக இருப்பினும், பிஹோர் கவுண்டியின் 2% வேலையின்மை விகிதத்துடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாகும். பிஹோர் கவுண்டியின் 34.5% குடித்தொகையைக் கொண்ட ஒராடெயா, அக் கவுண்டியின் 63% தொழில்துறை உற்பத்திக்குக் காரணமாக உள்ளது. இதன் முக்கியமான உற்பத்திகள், தளபாடங்கள், புடவை, ஆடை உற்பத்தி, காலணிகள் மற்றும் உணவு வகைகளாகும்.

2003 ல் நகரின் முதலாவது பெரிய கொள்வனவு மையமான லோட்டஸ் சந்தை வர்த்தக மையம் ஒராடெயாவில் திறந்து வைக்கப்பட்டது.

இனங்கள்

வரலாறு

  • 1910: 69.000 (ரோமானியர்கள்: 5.6%, ஹங்கேரியர்கள்: 91.10%)
  • 1920: 72.000 (R: 5%, H: 92%)
  • 1930: 90.000 (R: 25%, H: 67%)
  • 1966: 122.634 (R: 46%, H: 52%)
  • 1977: 170.531 (R: 53%, H: 45%)
  • 1992: 222.741 (R: 64%, H: 34%)

Present

2002 ஆன் ஆண்டின் கணக்கெடுப்பின்படி மொத்த மக்கட் தொகையின் இனவாரியான விபரம் பின்வருமாறு அமைந்துள்ளது:

  • ருமேனியர்: 145,295 (70.4%)
  • மக்யர்கள்: 56,830 (27.5%)
  • ரோமா: 2,466 (1.2%)
  • ஜெர்மானியர்: 566 (0.3%)
  • ஸ்லோவாக்கியர்: 477 (0.2%)
  • யூதர்: 172
  • உக்ரேனியர்: 76
  • பல்கேரியர்: 25
  • ரஷ்யர்: 25
  • செர்பியர்: 17
  • செக் மக்கள்: 9
  • துருக்கியர்: 9

பகுதிகள்

இந்த நகரம் "குவாட்டர்ஸ்" என அழைக்கப்படும் பின்வரும் வட்டாரங்களாகப் (districts) பிரிக்கப்பட்டுள்ளது:

  • மத்திய ஒராடெயா
  • வியை (Vie)
  • தவிரோசா/தவிரோசம் (Nufărul)
  • உரொசோரியம் (Rogerius)
  • வாலேன்சா (Velenţa)
  • கண்டெமிர் (Cantemir)
  • அயோசியா (Ioşia)

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.