திரான்சில்வேனியா

டிரான்சில்வேனியா (Transylvania) தற்கால மத்திய உருமேனியாவிலுள்ள ஓர் வரலாற்றுப் பகுதியாகும். கிழக்கிலும் தெற்கிலும் கார்ப்பத்தியன் மலைத்தொடரை இயற்கை எல்லைகளாகக் கொண்ட பழைய டிரான்சில்வேனியா மேற்கில் அப்புசெனி மலைகள் வரை நீண்டும் இருந்தது. டிரான்சில்வேனியா என்ற சொல் சரியான பகுதியைத் தவிர வரலாற்றுப் பகுதிகளான கிரைசானாவையும் மராமூரெசையும் அரிதாக உரோமானியாவிலுள்ள பனத் பகுதியையும் உள்ளடக்கிக் குறிப்பிடும்.

டிரான்சில்வேனியா
டிரான்சில்வேனியா/ஆர்டீல் (உரோமேனியம்)
எர்டெலி (அங்கேரியம்)
சீபென்பர்கன் (செருமன் மொழி)
உரோமானியாவின் வரலாற்றுப் பகுதிகள்
ஆல்பா மாவட்டத்தின் அரீசெனி அருகே அப்புசெனி மலைகள்

சின்னம்
அடைபெயர்(கள்): "வனங்களுக்கப்பாலான நிலங்கள்"

  சரியான டிரான்சில்வேனியா
  பனத், கிரைசானா, மராமூரெசு
ஆள்கூறுகள்: 46°46′0″N 23°35′0″E
நாடு உருமேனியா
Largest cityCluj-Napoca
பரப்பளவு
  மொத்தம்1,02,834
மக்கள்தொகை (2011)
  மொத்தம்67,89,250
  அடர்த்தி66
இனங்கள்டிரான்சில்வேனியர்
நேர வலயம்கி.ஐ.நே (ஒசநே+2)
  கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே (ஒசநே+3)

டிரான்சில்வேனியா பகுதி இங்குள்ள கார்ப்பத்தியன் மலைத்தொடரின் இயற்கைக் காட்சிகளுக்காகவும் வரலாற்றுச் சிறப்பிற்காகவும் அறியப்படுகின்றது. குளுஜ்-நபோகா, பிராசோவ், சிபியு, டார்கு மூரெசு இப்பகுதியிலுள்ள முதன்மை நகரங்கள் ஆகும்.

மேற்கத்திய உலகில் டிரான்சில்வேனியா பொதுவாக வாம்பைர்களுடன் தொடர்புபடுத்தப்படுகிறது; இது பிராம் இசுடோகரின் புதினம் டிராகுலா மற்றும் அதன் திரை வடிவங்களையொட்டி உருவாகியுள்ளது.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "Transylvania Society of Dracula Information". Afn.org (1995-05-29). பார்த்த நாள் 2012-07-30.
  2. "Travel Advisory; Lure of Dracula In Transylvania". The New York Times. 1993-08-22. https://query.nytimes.com/gst/fullpage.html?res=9F0CE6DE143BF931A1575BC0A965958260.
  3. "Romania Transylvania". Icromania.com (2007-04-15). பார்த்த நாள் 2012-07-30.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.