ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரம்

ஐக்கிய அரபு அமீரகம் (சுருக்கமாக அமீரகம்) பல்வேறு துறைகளில் பொருளாதார வளர்ச்சியடைந்துள்ளது. முக்கியமாக சமூக பொருளாதாரத்தை சுட்டும்போது தனிநபர் வருமானம், தனிநபர் மின் நுகர்வு, மற்றும் மனித வளர்ச்சி சுட்டெண் ஆகியவை ஏற்றம் பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு அமீரகம்[1] பொருளாதாரம்
நாணயம்ஐக்கிய அரபு அமீரக திர்கம் (AED)
சார்ந்துள்ள வர்த்தக அமைப்புகள்ஓப்பெக் மற்றும் உலக வணிக அமைப்பு
புள்ளி விவரம்
மொ.உ.உ$201 பில்லியன் (2009 est.)[1]
மொ.உ.உ வளர்ச்சி+3.1% (2010 est.)
நபர்வரி மொ.உ.உ$42,000 (2009 est.) (17வது)
துறைவாரியாக மொ.உ.உவிவசாயம் (1.6%), தொழில்துறை (61.8%), சேவைகள் (36.6%) (2008 est.)
பணவீக்கம் (நு.வி.கு)1.5% (2009 est.)
தொழிலாளர் எண்ணிக்கை3.168 மில்லியன் (2009 est.) [1]
தொழில் வாரியாகத் தொழிலாளர் எண்ணிக்கைவிவசாயம் (7%), தொழில்துறை (15%), Services (78%) (2000 est.)
வேலையின்மை12.7% (2008)[2]
முக்கிய தொழில்துறைபெட்ரோலியம் and Petrochemicals, மீன் பிடித் தொழில், அலுமினியம், சிமெந்து, உரம், Commercial Ship Repair, கட்டுமானப் பொருட்கள், Boat Building, கைத்தொழில், துணி
தொழில் செய்யும் வசதிக் குறியீடு33வது[3]
வெளிக்கூறுகள்
ஏற்றுமதி$174 பில்லியன் f.o.b. (2009 est.)
ஏற்றுமதிப் பொருட்கள்பெட்ரோலியம், இயற்கை எரிவளி, மறுஏற்றுமதி, உளர் மீன், பேரிச்சம் பழம்
முக்கிய ஏற்றுமதி உறவுகள்ஜப்பான் 26.5%, தென் கொரியா 10.9%, இந்தியா 10.7%, ஈரான் 7.5%, தாய்லாந்து 6.1%, பாக்கித்தான் 4.7% (2008)
இறக்குமதி$141 பில்லியன் f.o.b. (2009 est.)
இறக்குமதிப் பொருட்கள்Machinery and Transport Equipment, வேதிப்பொருள், உணவு
முக்கிய இறக்குமதி உறவுகள்சீன மக்கள் குடியரசு 12.9%, இந்தியா 12%, அமெரிக்க ஐக்கிய நாடு 8.6%, ஜப்பான் 6%, துருக்கி 4.4%, இத்தாலி 4.2% (2008)
மொத்த வெளிக்கடன்$128.6 பில்லியன் (31 திசம்பர் 2009 est.)
பொது நிதிக்கூறுகள்
பொதுக் கடன்47.2% of GDP (2009 est.) [1]
வருவாய்$54.05 பில்லியன் (2009 est.)
செலவினங்கள்$54.68 பில்லியன் (2009 est.)
'

2008 ஆண்டில் அமீரகம் CCASG தரப் பட்டியலில் சவூதி அரேபியாவிற்கு அடுத்ததாக இரண்டாமிடம் வகித்தது. மத்திய கிழக்கு நாடுகள்-வட ஆப்பிரிக்கா (MENA) பகுதியில் சவூதி அரேபியா மற்றும் ஈரானிற்கு அடுத்ததாக மூன்றாமிடமும் உலக அளவில் 38வது இடமும் வகித்தது.[4]

நாட்டின் மொஉஉற்பத்தியின் சரியான வளர்ச்சி விகிதம் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தால், அனைத்து புள்ளியியல் தகவல்களும் அமீரகம் உலகளவில் தற்போது வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்டுள்ளதாக சொல்கின்றன. நிதி மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் படி மொஉஉ 2006ல் $175 பில்லியனாக இருந்தது (35 சதவீதம் வளர்ச்சி). இது 2005ல் 130 பில்லியனாக இருந்த்து குறிப்பிடத்தக்கது.

அமீரகம் இயற்கை வளங்களின் வருமானத்தை மட்டும் நம்பியிருக்கவில்லை. பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு ஏற்றுமதி நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பங்காற்றுகின்றன. குறிப்பாக அபுதாபியின் முக்கிய ஆதாரமாக இவை உள்ளன. அதீத கட்டுமான வளர்ச்சி, விரிவடையும் உற்பத்தி, சேவை சார்ந்த தொழில்கள் ஆகியவை அமீரகத்தின் முக்கிய பல்தரப்பட்ட பொருளாதாரமாகும். நாடுமுழுவதும் தற்போது 350 பில்லியன் டாலர் பெறுமான கட்டுமான திட்டங்கள் நடைபெறுகின்றன.[5] அமீரகம் உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினராக உள்ளது..

மேற்கோள்கள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.