ஏவோ மொராலெஸ்

ஏவோ மொராலெசு (Evo Morales, எசுப்பானிய ஒலிப்பு: [ˈeβo moˈɾales]; பிறப்பு: அக்டோபர் 26, 1959) 2006 முதல் 2019 வரை பொலிவியாவின் 80-வது அரசுத்தலைவராகப் பதவியில் இருந்த அரசியல்வாதி ஆவார். பழங்குடியினத்தைச் சேர்ந்த முதலாவது அரசுத்தலைவராகவும் இவர் அறியப்படுகிறார்.[1] இவரது நிர்வாகம் இடதுசாரி அரசியல் கொள்கைகளை நடைமுறைப்படுத்துதல், வறுமைக் குறைப்பு மற்றும் பொலிவியாவில் அமெரிக்க மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் செல்வாக்கை எதிர்ப்பதில் கவனம் செலுத்தியது. சோசலிசவாதியான இவர், சோசலிசத்துக்கான இயக்கம் என்ற அரசியல்கட்சியின் தலைவராக உள்ளார். 2019 தேர்தல்களில் இவரது அரசாங்கம் மோசடி செய்ததாக அமெரிக்க நாடுகள் அமைப்பு விடுத்த அறிக்கையை அடுத்து, இவரைப் பதவி விலகக் கோரி பொலிவிய இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து நாட்டில் குறிப்பிடத்தக்க அமைதியின்மை ஏற்பட்டதன் எதிரொலியாக, இவர் 2019 நவம்பர் 10 அன்று தனது அரசுத்தலைவர் பதவியைத் துறந்தார்.

ஏவோ மொராலெஸ்
Evo Morales
பொலிவியாவின் 80-வது அரசுத்தலைவர்
பதவியில்
சனவரி 22, 2006  நவம்பர் 10, 2019
துணை குடியரசுத் தலைவர் ஆல்வேரோ கார்சியா லினேரா
முன்னவர் எதுவார்தோ ரொட்ரிகசு
பின்வந்தவர் ஏட்ரியானா சல்வத்தியேரா (பதில்)
சோசலிசத்துக்கான இயக்கத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 1, 1998
முன்னவர் எவருமில்லை
தனிநபர் தகவல்
பிறப்பு உவான் ஏவோ மொராலெசு ஐமா
அக்டோபர் 26, 1959 (1959-10-26)
சலாவி, பொலிவியா
அரசியல் கட்சி சோசலிசத்துக்கான இயக்கம்
பிள்ளைகள் 2
பெற்றோர் தியோனீசியோ சோக்
மரியா ஐமா மமானி
கையொப்பம்
படைத்துறைப் பணி
பற்றிணைவு பொலிவியா
கிளை பொலிவிய இராணுவம்
பணி ஆண்டுகள் 1977–1978
படையணி நான்காவது இங்காவி குதிரைப் படையணி

மொராலெசு தனது பதவி விலகலை ஒரு இராணுவப் புரட்சி எனக் குற்றஞ்சாட்டினார். மெக்சிக்கோ, கியூபா, நிக்கராகுவா, வெனிசுவேலா ஆகிய நாடுகளும் அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. 2019 நவம்பர் 12 இல் இவர் அரசியல் தஞ்சம் பெற்று மெக்சிக்கோ சென்றார்.

ஐமாரா பழங்குடிக் குடும்பம் ஒன்றில் பிறந்த மொராலசு கொக்கோ பயிரிடும் விவசாயியாகப் பணியாற்றி பின்னர் ஒரு தொழிற்சங்கவாதியானார். அமெரிக்க சார்பு அரசுகள், கொக்கோ பயிர்ச் செய்கை தடுப்பை செயற்படுத்தியதை எதிர்த்தார். தாம் கொக்கோ என்ற இயற்கைப் பயிரையே பயரிடுவதாகவும், கொக்கெயின் என்ற போதைப்பொருளை உற்பத்தி செய்யவில்லை என்றும் வாதிட்டார். "முதலாளித்துவம் மனிதர்களின் மிகக்கொடிய எதிரி, எந்த ஒரு அமைப்பு மனிதர்களின் அடிப்படை தேவைகளான மருத்துவம், கல்வி, உணவு ஆகிவற்றை நிறைவு செய்யவில்லையோ அவ்வமைப்பு மிகப்பெரிய மனித உரிமை மீறல்களைச் செய்கின்றது" என்ற கருத்தினை உடையவர்.

ஆட்சிக்காலம்

  • 2005ல் நடைபெற்ற தேர்தலில் மொரேல்ஸ் மிக பிரம்மாண்டமான வெற்றி பெற்றார். அவரது சோசலிசத்திற்கான பேரியக்கம் (மாஸ்) பூர்வகுடி மக்களின் கவுரவத்தை மீட்டெடுக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டது.
  • 2009ல் நிறைவேற்றப்பட்ட புதிய அரசியலமைப்பின்படி பூர்வகுடிகளின் கொடி பழைய பொலிவியாவின் தேசியக் கொடிக்கு இணையாக அங்கீகரிக்கப்பட்டது. அந்தக் கொடியும், ராணுவ வீரர்களின் உடைகளில் தைக்கப்பட்டது. அரசு அலுவலகங்களில் பறக்கவிடப்பட்டது.[2]

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.