எஸ். டி. சோமசுந்தரம்

எஸ்.டி.சோமசுந்தரம்(ஆங்கிலம்: S.D.Somasundaram ) தமிழக அரசியல்வாதியாகவும் தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டக்காடு கிராமத்தில் 1930 இல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகததில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றார். தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றியுள்ளார்.

எஸ்.டி.சோமசுந்தரம்
தமிழ்நாடு முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர்
தொகுதி தஞ்சாவூர்
தனிநபர் தகவல்
பிறப்பு திசம்பர் 5, 1930(1930-12-05)
சேண்டக்காடு, பட்டுக்கோட்டை,தஞ்சாவூர் மாவட்டம்
இறப்பு திசம்பர் 6, 2001(2001-12-06) (அகவை 71)
சென்னை
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்
As of december 6, 2001

1980ல்பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் 1991ல் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக இருமுறை பணியாற்றியுள்ளார். இவர் தமிழக சட்டபேரவையில் உறுப்பினராகவும், இருமுறை 1971, 1977 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் இவர் எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

தன்னுடைய அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்தில் திராவிடர் கழகத்திலும், பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்திலும், அதன் பின் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலும் இருந்த பின்னர் தம் சொந்த கட்சியான நமது கழகம் என்ற தனி அமைப்பை நடத்தினார். பின்னர் மீண்டும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். இவர் 06-12-2001ல் காலமானார்.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.