எஸ். டி. சுப்புலட்சுமி

ஸ்ரீவைகுந்தம் துரைசாமி சுப்புலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட எஸ். டி. சுப்புலட்சுமி 1930-40களில் நடித்த தமிழ் நடிகையும், பாடகியும் ஆவார். இவர் இயக்குநர் கே. சுப்ரமணியத்தின் துணைவியாராவார்.[1] இவரது குடும்ப நண்பரான ம. ச. சுப்புலட்சுமியை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கிய பங்குண்டு.[1]

எஸ். டி. சுப்புலட்சுமி
எஸ். டி. சுப்புலட்சுமி
பிறப்புசிறீவைகுந்தம் துரைசாமி சுப்புலட்சுமி
பணிநடிகை, பாடகி
செயல்பட்ட 
ஆண்டுகள்
1934 - 1964
வாழ்க்கைத்
துணை
கே. சுப்பிரமணியம்

வாழ்க்கைக் குறிப்பு

துரைசாமி, ஜானகி தம்பதியருக்கு மகளாக சிறீவைகுந்தம் எனும் ஊரில் பிறந்தார். சிறுவயது முதலே மேடைநாடகத்தில் ஆர்வம் காட்டினார். பின்நாளில் அவரது குடும்பம் மதுரையில் வாழ்ந்தன. அங்கே அவர் கருநாடக சங்கீதமும், நாட்டியமும் பயின்றார். இவரது பெற்றோர் இவருக்குப் பலவாறு ஒப்பனையிட்டு நாடக நிறுவனங்களுக்கு இவரது புகைப்படங்களை அனுப்பி வாய்ப்புகளைத் தேடினர். இதுவே இவர் சிறுவயது முதல் மேடை நாடகங்களில் பங்குகொள்ள உதவியது. வளர்ந்த பின்னர் இவர் எம். கே. தியாகராஜ பாகவதர், கே. பி. சுந்தராம்பாள் மற்றும் டி. ஆர். மகாலிங்கம் போன்ற முக்கிய நட்சத்திரங்களுடன் நடித்துப் புகழ்பெற்றார்.

நடித்த திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் பாத்திரம் குறிப்புகள்
1934பவளக்கொடிஇளவரசி பவளக்கொடி
1935நவீன சதாரம்சதாரம்
1936உஷா கல்யாணம்உஷா
1936பக்த குசேலாகிருஷ்ணன், சுசீலா
1936நவீன சாரங்கதாரா
1937மிஸ்டர் அம்மாஞ்சி
1939தியாகபூமிசாவித்திரி
1942அனந்த சயனம்
1945மானசம்ரட்சணம்
1946விகடயோகி
1952அந்தமான் கைதி
1953பணம்
1954துளி விஷம்
1954தூக்குத் தூக்கி
1955குலேபகாவலி
1956சம்பூர்ண ராமாயணம்கௌசல்யா
1957ராணி லலிதாங்கிசக்கரவர்த்தினி அங்கயர்க்கண்ணி
1957ராஜ ராஜன்அரசி செண்பகவல்லி
1959யானை வளர்த்த வானம்பாடி
1959கல்யாணப் பரிசு
1964பட்டணத்தில் பூதம்
1970எங்கிருந்தோ வந்தாள்

மேற்சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.