எரிச்சி
எரிச்சி (Erichi) என்பது தமிழ்நாட்டில்,அறந்தாங்கி வட்டம், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.[1] இது புதுக்கோட்டை நகரில் இருந்து 24கிமீ தூரத்தில் உள்ளது. இவ்வூர் சங்ககால ஊர்கள் பெயரில் இடம் பெற்றுள்ளது. கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார், புறநானூற்றில் பல பாடல்களை எழுதியவர். இவரது ஊரே ’எறிச்சி’ என்பதாகும், இந்த பெயர் இப்போது மருவி ’எரிச்சி’ என வழங்கப்படுகிறது.[2]
எரிச்சி Erichy | |
---|---|
கிராமம் | |
![]() புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கிக்குச் செல்லும் பாதை | |
நாடு | ![]() |
State | தமிழ்நாடு |
மாவட்டம் | புதுக்கோட்டை |
ஏற்றம் | 87.78 |
மொழிகள் | |
• அதிகாரபூர்வ மொழி | தமிழ் |
நேர வலயம் | IST (ஒசநே+5:30) |
PIN | 614 622 |
தொலைபேசிக் குறியீடு | 04371 |
வாகனப் பதிவு | TN 55 |
Sex ratio | 995 / 1000 ஆண்களுக்கு ♂/♀ |
ஆலயங்கள்
காசி விசுவநாதர் ஆலயம், எரிச்சி

இக்கோயில் மகாபாரதத்துடன் தொடர்புடையது. 17ம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது. ஐந்து பெருநிலங்கள்ல் ஒன்றான முல்லை நிலப்பகுதி(கடும் பாடு சாரந்த இடமும்) முழுவதும் எரிமலைப் பாறை போன்ற செம்பறாங்கல் போன்று பூமியின் அமைப்பில் காணப்படுகின்றன. இப்பாறை கற்களைக் கொண்டே இத்திருக்கோயிலும், அருகில் உள்ள மெய்யர் அய்யனார் கோயிலும், சுப்பிரமணியர் கோயிலும், காமாட்சி அம்மன் கோயிலும் அறந்தாங்கி அகரம் காசி விஸ்வநாதர் கோயிலும் குளவாய்பட்டி அட்ட வீரட்டேஸ்வரர் கோயில் கருவறை மற்றம் உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
32.5 அடி நீளமும் 21.5 அடி அகலமும் 40 அடி ஆழமும் கொண்ட சுணை ஒன்று செம்மறாங்கல் பாறைகளை வெட்டி அமைக்கப்பட்டு இருப்பது சிறப்புடையது ஆகும்.