உவர் நீர்
உவர் நீர் (Brackish water) என்பது நன்னீரும் கடல் நீரும் கலந்து உவர்ப்புத் தன்மை கொண்ட நீராகும். உவர் நீரில் நன்னீரை விட உப்புத் தன்மை கூடியதாகவும், கடல் நீரை விட உப்புத் தன்மை குறைவாகவும் காணப்படும். நன்னீர் ஆறுகள், உப்புத் தன்மை கொண்ட கடலில் கலக்குமிடமான முகத்துவாரங்களில் மற்றும் சதுப்பு நிலங்களில் காணப்படும் சிறப்பு உயிரினப்படிவங்கள் வளர்கிறது.

கடலோரங்களில் இறால் மீன் வளர்ப்புக்கு நன்னீரைக் கொண்டு செயற்கையான குளம், குடைகள் அமைப்பதால், அப்பகுதி உவர் நீர் தன்மை அடைகிறது.[1]
உவர்ப்புத் தன்மை
ஒரு லிட்டர் நன்னீரில் 0.5 கிராமிற்கு குறைவாகவும், உவர் நீரில் 0.5 முதல் 35 கிராம் வரையிலும், சலைன் நீரில் 35 50 கிராமுக்கு கீழாகவும், கடல் நீரில் 50 கிராமிற்கும் மேலாகவும் உவர்ப்புத் தன்மை (ppt%) கொண்டிருக்கும்.
கரையில் உப்பில் உவர்ப்புத் தன்மை (ஆயிரம் பங்கில் (ppt) அளவு) | |||
---|---|---|---|
நன்னீர் | உவர் நீர் | அடர் உவர் நீர்
(சலைன் வாட்டர்) |
கடல் நீர் |
< 0.5 | 0.5—35 | 35—50 | > 50 |
உவர் நீர் உயிரினங்கள் - தாவரங்கள்
முகத்துவாரங்கள்
இலண்டன் நகரத்தில் பாயும் தேம்சு ஆறு கடலில் கலக்குமிடமான முகத்துவாரத்தில், ஆற்றின் நன்னீரும், கடலின் நீரும் கலந்து உவர் நீர் தன்மை கொண்டதாக உள்ளது. உவர் நீர்நிலைகளில் உவர்நீர் முதலைகள் வாழ்கிறது.
அலையாத்தித் தாவரங்கள்

ஆறுகள் கடலில் கலக்கும் பகுதியின் உவர் நீரில் சுந்தரவனக்காடுகள் எனப்படும் அலையாத்தித் தாவரங்கள் நன்கு வளர்கிறது.[2]
உவர் நீர் கடல்கள் மற்றும் ஏரிகள்
சில கடல்களும், ஏரிகளும் உவர் நீர் தன்மை உள்ளதாக உள்ளது. அவைகளில் குறிப்பிடத்தக்கவைகள் பால்டிக் கடல் மற்றும் வடகடல் ஆகும்.[3] கடல் நீரில் உள்ளதை விட மூன்றில் ஒரு பங்கு உப்புத் தன்மை கொண்டதாக காசுப்பியன் கடல் உள்ளது.
உவர் நீர் அமைப்புகள்
உவர் நீர் கடல்கள்
உவர் நீர் ஏரிகள்
- சார்லஸ் ஏரி, லூசியானா, ஐக்கிய அமெரிக்க நாடு
- சில்கா ஏரி, ஒடிசா, இந்தியா
- பாங்காங் ஏரி, லடாக், ஜம்மு காஷ்மீர், இந்தியா
முகத்துவாரம் மற்றும் சதுப்பு நிலம்