தேம்சு ஆறு

தேம்ஃசு ஆறு (River Thames, தேம்ஸ் ஆறு) இங்கிலாந்தின் தென்பகுதியில் பாயும் ஆறாகும். முழுமையும் இங்கிலாந்தினுள்ளேயே ஓடும் நீளமான ஆறாகவும் ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாவது மிகப் பெரும் ஆறாகவும் விளங்குகிறது. இது லண்டன் நகரின் மையப்பகுதியில் பாய்வதால் பரவலாக அறியப்பட்டாலும் ஆக்சுஃபோர்ட், ரீடிங், ஹென்லே, வின்ட்சர், கிங்சுடன், ரிச்மோன்ட் ஆகிய பல முக்கிய நகரங்களை ஒட்டியும் ஓடுகிறது.

தேம்சு
ஆறு
இலண்டனில் தேம்சு
நாடு இங்கிலாந்து
கௌன்டிகள் குளோசெசுடெர்சையர், வில்ட்சையர், ஆக்சுஃபோர்ட்சையர், பெர்க்சையர், பக்கிங்காம்சையர், சுர்ரே, எசெக்சு, கென்ட்
மெட்ரோபொலிடன் கௌன்டி மாநகர லண்டன்
ஊர்கள்/நகரங்கள் கிரிக்லேட், லெக்லேட், ஆக்சுஃபோர்டு, அபிங்டன், வாலிங்ஃபோர்டு, ரீடிங், ஹென்லி, மார்லோ, மைடன்ஹெட், வின்ட்சர், இசுடைன்சு, வால்டன், கிங்சுடன், டெடிங்டன், லண்டன், டார்ட்ஃபோர்டு
உற்பத்தியாகும் இடம்
 - அமைவிடம் தேம்சு தோன்றுமுகம், குளோசெசுடர்சையர், UK
 - உயர்வு 110 மீ (361 அடி)
 - ஆள்கூறு 51.694262°N 2.029724°W / 51.694262; -2.029724
கழிமுகம் தேம்சு கழிமுகம் வடகடல்
 - அமைவிடம் சௌத்தென்ட், எசெக்சு, ஐக்கிய இராச்சியம்
 - elevation 0 மீ (0 அடி)
 - ஆள்கூறு 51.4989°N 0.6087°E / 51.4989; 0.6087
நீளம் 346 கிமீ (215 மைல்)
வடிநிலம் 12,935 கிமீ² (4,994 ச.மைல்)
Discharge for லண்டன்
 - சராசரி
Discharge elsewhere (average)
 - ஆக்சுஃபோர்டு நுழைவில்
 - ஆக்சுஃபோர்டை விலகுகையில்
 - ரீடிங்
 - வின்ட்சர்

இந்த ஆற்றின் பெயரொட்டு பல புவியியல் மற்றும் அரசியல் உள்பொருட்களுக்கு இடப்பட்டுள்ளன: ஆக்சுஃபோர்டிற்கும் மேற்கு லண்டனுக்கும் இடைப்பட்ட பகுதி தேம்சு பள்ளத்தாக்கு என்றும் பேரலை தேம்சை அடுத்துள்ளப் பகுதி தேம்சு கேட்வே என்றும் கிழக்கு இலண்டன் தேம்சு கழிமுகம் என்றும் அழைக்கப்படுகின்றன.

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.