உ. வாசுகி

உ. வாசுகி இந்திய பெண் அரசியல்வாதிகளில் ஒருவர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மத்தியக்குழு‍ உறுப்பினரும்,[1] அக்கட்சியின் தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் செயற்குழு‍ உறுப்பினரும்,[2] அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும் ஆவார்.[3] மகளிர் சிந்தனை என்ற சிற்றிதழின் ஆசிரியருமாவார்.

உ. வாசுகி
பிறப்புஜனவரி 21, 1958
திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு‍
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மத்தியக்குழு‍ உறுப்பினர்

வாழ்க்கை வரலாறு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரான ஆர். உமாநாத் இவரது தந்தை, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் முன்னோடித் தலைவர்களில் ஒருவரான பாப்பா உமாநாத் இவரது தாய், இவரது கணவர் ஏ.பி.விஸ்வநாதன் ஆவார்.

அரசியல் வாழ்க்கை

இவர் 1977-ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்தார். கடந்த 37 ஆண்டுகளாக தொடர்ந்து கட்சியில் இருந்து வருகிறார்.

வங்கி ஊழியராகப் பணியாற்றிய இவர் 2000இல் விருப்ப ஓய்வு பெற்று கடந்த 14 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் முழுநேர ஊழியராக செயல்பட்டு வருகிறார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய இவர் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்த பல்வேறு போராட்டங்களில் மாநிலம் முழுவதும் பிரேமானந்தா, சிதம்பரம் பத்மினி போன்ற போராட்டங்கள் உள்ளிட்டு முக்கிய பங்காற்றியவர். கோகோ கோலாவை எதிர்த்து சிவகங்கை படமாத்தூரில் நடைபெற்ற போராட்டத்தை தலைமையேற்று நடத்தியவர்.இந்தியப் பொதுத் தேர்தல், 2014 இல் வடசென்னை மக்களவைத் தொகுதியில் சிபிஐ (எம்) இன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.[4] மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவர்.[3]

அதேபோல் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளி, விடுதி மாணவிகள் மீதான பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராகவும், உத்தப்புரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீண்டாமை ஒழிப்பு போராட்டங்களிலும் ஈடுபட்டவர். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தவர். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இன் மத்தியக்குழு உறுப்பினராக உள்ளார்.

எழுதிய புத்தகங்கள்

  • பெண்ணியம் பேசலாம் வாங்க
  • பெண்: வன்முறையற்ற வாழ்வை நோக்கி

ஆதாரங்கள்

  1. People's Democracy
  2. "CPI(M) State Secretariats Formed". People's Democracy (மே 22, 2005). மூல முகவரியிலிருந்து மே 22, 2005 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் டிசம்பர் 21, 2013.
  3. "போராட்டப் பாதைகள் மீது பெண்கள் நம்பிக்கை வைக்க வேண்டும்: உ.வாசுகி". தினமணி (ஆகஸ்டு‍ 10, 2013). மூல முகவரியிலிருந்து ஆகஸ்டு‍ 10, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் டிசம்பர் 21, 2013.
  4. "களம் காணும் சிபிஎம் வேட்பாளர்கள்". தீக்கதிர் (மார்ச் 18, 2014). மூல முகவரியிலிருந்து மார்ச் 18, 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் மார்ச் 18, 2014.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.