ராவ் பகதூர்

ராவ் பகதூர் (Raobahadur ' [1]; சிலநேரங்களில்R.B.) என்பது பிரித்தானிய இந்தியாவில் நாட்டிற்கு சிறந்த சேவை புரிந்த தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் பட்டமாகும். இது வங்காளத்தில் ராய் பகதூர் என வழங்கப்பட்டது. "ராவ்" என்ற சொல் "இளவரசர்" என்பதையும் "பகதூர்" என்பது "மாண்பிற்குரியவர்" என்றும் பொருள்படும். பிரித்தானிய இந்தியாவில் இந்துக்களுக்கும் கிருத்துவர்களுக்கும் பதக்கமொன்றுடன் வழங்கப்பட்ட இப்பட்டம் தற்கால பத்மசிறீ போன்ற குடியியல் விருதுகளுக்கு இணையானது. இசுலாமிய, பார்சி மக்களுக்கு கான் பகதூர் என்று வழங்கப்பட்டது. சிலநேரங்களில் ராய் சாகிப் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இதற்கு அடுத்த உயரிய பட்டம் திவான் பகதூர்.

குறிப்பிடத்தக்க சிலர்

  1. வில்லவராயர் கடலரசர், தூத்துக்குடி
  2. பரமேசுவரன் பிள்ளை
  3. சி. வை. தாமோதரம்பிள்ளை
  4. எஸ். பி. ராசமாணிக்க பண்டாரம் (1899–1949), சேலம் ஜில்லா தலைவர், சேலம் தாலுக்கா தலைவர்(1934), நீதிக்கட்சி தலைவர், வள்ளல்
  5. சவரிநாதன் பிள்ளை, வருமானவரி ஆணையர், கோவை
  6. எல். ஸ்ரீராமுலுநாயுடு, சென்னை மாகாண மேயர்
  7. சாவூர் ஜான் பால், முல்லச்சேரி, கேரளா
  8. மருத்துவர் ஏ.மதுரம், புத்தூர், திருச்சிராப்பள்ளி
  9. சர் அன்னாசாமி தாமரைச்செல்வம் பன்னீர் செல்வம், தஞ்சாவூர்
  10. சா. கிருஷ்ணசாமி அய்யங்கார்
  11. ஹச். பி. அரி கௌடர்
  12. கே. எம். எஸ். இலக்குமணய்யர் [1886-1970], மதுரை.

திவான் பகதூர் பட்டம் பெற்றவர்கள்

  1. முருகதாஸ் தீர்த்தபதி, சமீன்தார், சிங்கம்பட்டி, திருநெல்வேலி
  2. சர் டி.விஜயராகவாச்சார்யா, கரூர் [2]
  3. இரட்டைமலை சீனிவாசன்

மேற்கோள்கள்

  1. RoyalArk Glossary - India
  2. விஜயராகவாசார்யாவின் சிறந்த அரசுச்சேவை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.