கான் பகதூர்

கான் பகதூர் (Khan bahadur ') என்பது பிரித்தானிய இந்தியாவில் நாட்டிற்கு சிறந்த சேவை புரிந்த தனிநபர்களுக்கு வழங்கப்பட்ட ஓர் பட்டமாகும். இசுலாமிய, பார்சி மக்களுக்கு கான் பகதூர் என்று வழங்கப்பட்டது. சிலநேரங்களில் ராய் சாகிப் என்ற பட்டமும் வழங்கப்பட்டது.[1]

இது வங்காளத்தில் ராய் பகதூர் என வழங்கப்பட்டது. "ராவ்" என்ற சொல் "இளவரசர்" என்பதையும் "பகதூர்" என்பது "மாண்பிற்குரியவர்" என்றும் பொருள்படும். பிரித்தானிய இந்தியாவில் இந்துக்களுக்கும் கிருத்துவர்களுக்கும் பதக்கமொன்றுடன் வழங்கப்பட்ட இப்பட்டம் தற்கால பத்மசிறீ போன்ற குடியியல் விருதுகளுக்கு இணையானது.


குறிப்பிடத்தக்க சிலர்

  1. கான் பகதூர் முஹம்மது உஸ்மான், சென்னை
  2. கான் பகதூர் சர் முகமது ஹபிபுல்லா, சென்னை
  3. கான் பகதூர் முஹம்மது பஜ்லுல்லாஹ்,சென்னை
  4. கான் பகதூர் காவஸ்ஜி பெட்டிகரா, மும்பை
  5. கான் பகதூர் ஏ.கே.ஜி.அகமது தம்பி மரைக்காயர்,நாகப்பட்டினம் மாவட்டம், திராவிட இயக்க வரலாறு - பாகம் 1
  6. கான் பகதூர் முஹம்மது மூஸா சேட்
  7. கான் பகதூர் பாசல் அலி
  8. குத்துஸ் பாஷா சாகிப்
  9. கான் பகதூர் சர் குலாம் முஹம்மத் அலி கான்
  10. கான் பகதூர் P.R.M. காசிம் முஹம்மது மரைக்காயர் மண்டபம்
  11. கான் பகதூர் S.K.M. சாகுல் ஹமீத் மரைக்காயர்,காயல்பட்டிணம் [1]
  12. கான் பகதூர் V. ஹமீத் சுல்தான் மரைக்காயர்,தஞ்சாவூர்
  13. கான் பகதூர் விஜயன் V M அப்துல் ரகுமான் அம்பலம், அபிராமம்
  14. கான் பகதூர் கபீருதீன் அஹமது, வங்காள நீதிபதி
  15. கான் பகதூர் ஜலாலுதீன் அஹமது, வங்காள வழக்கறிஞர்
  16. கான் பகதூர் அல்லாஹ் பக்‌ஷ் கபூல், பாகிஸ்த்தான், சிந்து
  17. கான் பகதூர் முஹம்மது அய்யூப் கோரோ, பாகிஸ்த்தான், சிந்து
  18. கான் பகதூர் சர் சையது அகமது கான்
  1. RoyalArk Glossary - India
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.