இராம. வீரப்பன்

இராம. வீரப்பன் (ஆங்கிலம் R.M.Veerappan) தமிழக அரசியல்வாதி. திரைப்பட தயாரிப்பாளர். தமிழ்நாடு அறநிலையத் துறை அமைச்சராகப் பணியாற்றியவர்.

இராம. வீரப்பன்
தமிழ்நாட்டு அறநிலையத் துறை அமைச்சர்
பதவியில்
1977-1987,1991-1996
தனிநபர் தகவல்
பிறப்பு செப்டம்பர் 9, 1926 (1926-09-09)
வல்லத்திராக்கோட்டை புதுக்கோட்டை மாவட்டம்
அரசியல் கட்சி எம்.ஜி.ஆர். கழகம்
வாழ்க்கை துணைவர்(கள்) இராஜம்மாள்
இருப்பிடம் சென்னை

இளமைக்காலம்

ஆர்.எம்.வீ. என அழைக்கப்படும் இராம. வீரப்பன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வல்லத்திராக்கோட்டை கிராமத்தில் பிறந்தார்.

நாடக, திரைப்பட வாழ்க்கை

எம்.ஜி.ஆர் 1953ல் "எம்.ஜி.ஆர் நாடக மன்றம்" மற்றும் "எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்" என்ற பெயரில் சினிமா நிறுவனம் ஆரம்பித்தார். இந்த இரண்டு நிறுவனத்திற்கும் இராம. வீரப்பனை நிர்வாக பொறுப்பாளராக நியமித்தார். இராம. வீரப்பன் 1963ல் "சத்யா மூவிஸ்" என்ற பெயரில் சினிமா பட நிறுவனம் ஆரம்பித்தார்.[1] தென்னிந்திய நடிகர்சங்க செயற்குழு உறுப்பினராக 1956ஆம் ஆண்டில் இருந்தார்.[2]

அரசியல்

இருமுறை 1977 - 1986 வரை மாநிலச் சட்ட மேலவை உறுப்பினராகவும், இருமுறை 1986 இடைத்தேர்தலில், திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் மற்றும்1991 இடைத்தேர்தலில், காங்கேயம் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக சட்டபேரவை உறுப்பினராக பணியாற்றியுள்ளார்.[3] எம்.ஜி.ஆர், ஜெ. ஜெயலலிதா அமைச்சரவைகளில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

சத்யா மூவிஸ் தயாரித்த பாட்ஷா பட வெள்ளி விழாவில் ரஜினிகாந்த், வெடிகுண்டு கலாச்சாரம் பற்றியும், ஆட்சியைப் பற்றியும் கருத்துக்கள் தெரிவித்தார். அப்போது, ஜெ. ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தார். அவருடைய மந்திரி சபையில், வீரப்பன் உணவு அமைச்சராகப் பதவி வகித்தார். இதன்பின் திடீரென்று அமைச்சர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். சில நாட்களில், அ.தி.மு.க.வில் இருந்தும் நீக்கப்பட்டார்.[4] இதன் காரணமாக, "எம்.ஜி.ஆர். கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை 1995-ம் ஆண்டு அக்டோபர் 17-ந்தேதி இராம.வீரப்பன் தொடங்கினார்.

திருமணம்

மதுரை திருப்பரன்குன்றத்தில் 12-3-1956ஆம் நாள் இவருக்கும் இராஜம்மாள் என்பவருக்கும் கா. ந. அண்ணாதுரை தலைமையில் திருமணம் நடைபெற்றது. அதில் என். எஸ். கிருஷ்ணன். எம். ஜி. சக்ரபாணி. ம. கோ. இராமச்சந்திரன். எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.[2]

ஆதாரம்

  1. இராம. வீரப்பனின் வாழ்க்கை வரலாற்று நூல் ("ஆர்.எம்.வீ. ஒரு தொண்டர்)
  2. திராவிடநாடு (இதழ்) நாள்:1-4-1956, பக்கம் 11
  3. http://eci.nic.in/eci_main/ByeElection/Bye-ele-results%2052-95.xls
  4. http://rajinifans.com/history/part95.php
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.