இராஜமௌலி

இராஜமௌலி சிறீசைல சிறீ இராஜமௌலி சுருக்கமாக சி. சி. இராஜமௌலி (எஸ். எஸ். இராஜமௌலி) என்று அழைக்கப்படுகிறார். இவர் புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட இயக்குனராவார். இவர் இயக்குனர் கே. ராகவேந்திர ராவ் வழிகாட்டுதலின் கீழ் தொலைக்காட்சி தொடர்களை இயக்கினார். இயக்குனரும் எழுத்தாளருமான வி. விஜயேந்திர பிரசாத் என்பவருக்கு மகனாக கருநாடக மாநிலம் ரெய்ச்சூரில் அக்டோபர் 10, 1965ல் பிறந்தார்.

எஸ். எஸ். இராஜமௌலி
பிறப்புஅக்டோபர் 10, 1973 (1973-10-10)
ரெய்ச்சூர், கருநாடகம், இந்தியா
இருப்பிடம்ஹதராபாத், ஆந்திர பிரதேசம், இந்தியா
வாழ்க்கைத்
துணை
இரமா இராஜமௌலி [1]
பிள்ளைகள்கார்த்திகேயா, மயூகஹா
வலைத்தளம்
www.ssrajamouli.in

இவரின் முதல் திரைப்படம் ஸ்டூடண்ட் நெம்பர் 1, இதை ராகவேந்திர ராவ் தயாரிக்க அவரின் உதவியாளராக இருந்த இவர் இயக்கினார். இதில் கதாநாயகனாக ஜூனியர் என் டி ஆர் நடித்தார். இதுவே ஜூனியர் என் டி ஆரின் முதல் பெரு வெற்றி படமாகும். இவர் இயக்கிய அனைத்து படங்களும் வெற்றிப்படங்களாகும். ஸ்டூடண்ட் நெம்பர் 1 என்ற பெயரிலேயே இப்படம் தமிழில் எடுக்கப்பட்டது. இவரின் சிம்மாத்திரி என்ற படம் கஜேந்திரா என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது. விக்கரமகுடு என்ற படம் தமிழில் சிறுத்தை என மீண்டும் படமாக்கப்பட்டது. மகாதீரா என்ற படம் மாவீரன் என தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

நான் ஈ என்ற படம் இவர் நேரடியாக தெலுங்கிலும் தமிழிலும் இயக்கியதாகும்.ஊடகங்களில்

இவரின் அனைத்து படங்களுக்கும் இசை மரகதமணி, படத்தொகுப்பு கோட்டகிரி வெங்கடேசுவர ராவ் ஆவார்கள்.

ஊடகங்கள்

ராஜமௌலி படம் இயக்கும் முன்பு ஈநாடு தெலுங்கு சேனலில் சில தொடர்களை இயக்கிக் கொண்டிருந்தார்.[2]

விருப்பம்

ராஜமௌலிக்கு இன்னும் நிறைவேறாத ஆசை மோகன்லால் வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பது தான். இரண்டாவது படத்திலேயே அவரை இயக்க வேண்டியது மிஸ்ஸாகிவிட்டது. ஆனால் பாகுபலி 2க்குப் பிறகு கண்டிப்பாக அவரை இயக்குவேன் எனக் கூறியிருக்கிறார் ஜக்கன்னா.[2]

திரைப்பட பட்டியல்

ஆண்டுபடங்கள்மொழிகுறிப்பு
2001ஸ்டூடண்ட் நம்பர்.1தெலுங்குமொழிமாற்றம் தமிழில் - ஸ்டூடண்ட் நம்பர் 1
2003சிம்ஹாட்ரிதெலுங்கு
2004சைதெலுங்கு
2005சத்ரபதிதெலுங்கு
2006விக்ரமற்குடுதெலுங்கு
2007யமதொங்காதெலுங்கு
2009மகதீரா தெலுங்கு
2010மரியாத ராமன்னாதெலுங்கு
2011ராஜாண்ணதெலுங்குஆக்சன் காட்சிகள் மட்டும் இயக்கம்
2012நான் ஈ (திரைப்படம்)தெலுங்கு
நான் ஈ (திரைப்படம்)தமிழ்
2015பாகுபலிதெலுங்கு
பாகுபலிதமிழ்
2017பாகுபலி 2தெலுங்கு
பாகுபலி 2தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும்

  1. wife name
  2. "ராஜமௌலிக்கு இன்னொரு பெயர் ஜக்கன்னா!". Vikatan. 7 july 2016. http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/69331-director-ssrajamouli-birthday-special.html. பார்த்த நாள்: 15 February 2017.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.