இரா. செல்வக்கணபதி
இரா. செல்வக்கணபதி (1940 - மார்ச் 2, 2016) தமிழறிஞரும், தமிழ்ப் பேராசிரியரும், பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். சைவசமயக் கலைக்களஞ்சியம் எனும் பெருந்தொகுப்பு நூலை வெளியிட்டவர்.[1]
வாழ்க்கைச் சுருக்கம்
தமிழ்நாடு, மயிலாடுதுறையைச் சேர்ந்த[2] இரா. செல்வகணபதி திருவாரூரில் 1940-ஆம் ஆண்டு பிறந்தார்.[3] தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்.[3] சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1965 ஆம் ஆண்டில் தமிழ் வித்துவான் பட்டம் பெற்றார். பின்னர், முதுகலை, முனைவர் பட்டங்களும் பெற்றார்.[2] தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் 25 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். 1992 முதல் 94 வரை அக்கல்லூரியின் முதல்வராகவும் பணியாற்றினார். 1996-இல் பணி ஓய்வு பெற்றார்.[3] மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, இலண்டன், ஆத்திரேலியா போன்ற நாடுகள் சென்று இவர் சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.[2]
செல்வக்கணபதிக்கு மனைவி சந்திரா, மற்றும் மகன் அருண், மகள் பாரதி ஆகியோர் உள்ளனர்.[3]
வெளியிட்டுள்ள நூல்கள்
- சைவசமயக் கலைக்களஞ்சியம், 10 தொகுதிகள் (2006-2012)
- தருமபுர ஆதீனமும் தமிழும், 1984[4]
- சைவமும் தமிழும் (2005)
- 21ம் நூற்றாண்டில் சங்க இலக்கியம் (2010)
- கம்பனில் பெண்ணியம்
- இடர் களையும் திருப்பதிகங்கள்[2]
குறுந்தகடுகள்
- திருவாசகப் பேருரை (10 மணி நேரம்)
- பன்னிரு திருமுறைகள் (பாடல்களோடு 30 மணி நேரம்)
- கம்ப ராமாயணப் பேருரை (20 மணி நேரம்)
- பெரிய புராணப் பேருரை (52 மணி நேரம்)[2]
- ஆறுமுக நாவலர்
விருதுகளும், பட்டங்களும்
மேற்கோள்கள்
- துணைவேந்தர் ம. திருமலை (10 மே 2014). "சைவ சமயக் கலைக் களஞ்சியம் தமிழ் மொழிக்கு கிடைத்த கொடை". தினமணி. பார்த்த நாள் 2 மார்ச் 2016.
- "Encyclopaedic effort". தி இந்து (22 மார்ச் 2012). பார்த்த நாள் 2 மார்ச் 2016.
- "காலமானார் தமிழறிஞர் இரா.செல்வக்கணபதி". தினமணி (3 மார்ச் 2016). பார்த்த நாள் 3 மார்ச் 2016.
- "தருமபுர ஆதீனமும் தமிழும்". பார்த்த நாள் 2 மார்ச் 2016.
- "கொழும்பு கம்பன் விழா-2014". தினகரன் (9 பெப்ரவரி 2014). பார்த்த நாள் 2 மார்ச் 2016.