இடாய்ச்சு பெயர்ச்சொற்குறி

இடாய்ச்சு மொழியில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறிகளை இடாய்ச்சு பெயர்ச்சொற்குறி என்னும் இக்கட்டுரையில் காண்போம். இடாய்ச்சு பெயர்ச்சொற்குறிகள், எண், வேற்றுமை, பால் போன்றவைகளை ஒன்றி வரும். அதை, அவைகளின் உருபை (உருபு) கொண்டு அறியலாம்.


இடாய்ச்சு பெயர்ச்சொற்குறி வகைகள்

இடாய்ச்சு மொழியில் இரண்டு வகையான பெயர்ச்சொற்குறிகள் உள்ளன. அவை,

  • நிச்சய பெயர்ச்சொற்குறி
  • நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி


நிச்சய பெயர்ச்சொற்குறி

நிச்சய பெயர்ச்சொற்குறி உருபு

ஆண்பால் (ஒருமை) ஒன்றன் பால் (ஒருமை) பெண்பால் (ஒருமை) பன்மை
முதலாம் வேற்றுமை -er -es -e -e
இரண்டாம் வேற்றுமை -en -es -e -e
நான்காம் வேற்றுமை -em -em -er -en
ஆறாம் வேற்றுமை -es -es -er -er
  • மேற்கண்ட உருபுகள் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிக்கு மட்டுமின்றி dies-, jen- (இது, அது) போன்ற இடப் பெயர்ச்சொற்களுக்கும் welch- (எந்த) என்னும் இணை இடப் பெயர்ச்சொல்லுக்கும் (Relative pronoun) பொருந்தும்.


நிச்சய பெயர்ச்சொற்குறி

ஆண்பால் (ஒருமை) ஒன்றன் பால் (ஒருமை) பெண்பால் (ஒருமை) பன்மை
முதலாம் வேற்றுமை der das die die
இரண்டாம் வேற்றுமை den das die die
நான்காம் வேற்றுமை dem dem der den
ஆறாம் வேற்றுமை des des der der


நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி

நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி உருபு

ஆண்பால் (ஒருமை) ஒன்றன் பால் (ஒருமை) பெண்பால் (ஒருமை) பன்மை
முதலாம் வேற்றுமை - - -e -e
இரண்டாம் வேற்றுமை -en - -e -e
நான்காம் வேற்றுமை -em -em -er -en
ஆறாம் வேற்றுமை -es -es -er -er
  • மேற்கண்ட உருபுகள் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிக்கு மட்டுமின்றி mein-, dein-, sein-, ihr-, unser-, euer/eur- போன்ற உரிமை இடப் பெயர்ச்சொற்களுக்கும் (Possessive pronoun) பொருந்தும்.


நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி

ஆண்பால் (ஒருமை) ஒன்றன் பால் (ஒருமை) பெண்பால் (ஒருமை)
முதலாம் வேற்றுமை ein ein eine
இரண்டாம் வேற்றுமை einen ein eine
நான்காம் வேற்றுமை einem einem einer
ஆறாம் வேற்றுமை eines eines einer
  • ஆங்கிலத்தில் உள்ளதை போலவே இடாய்ச்சு மொழியிலும் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிக்கு பன்மை கிடையாது.


எதிர்மறை நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி

ஆண்பால் (ஒருமை) ஒன்றன் பால் (ஒருமை) பெண்பால் (ஒருமை) பன்மை
முதலாம் வேற்றுமை kein kein keine keine
இரண்டாம் வேற்றுமை keinen kein keine keine
நான்காம் வேற்றுமை keinem keinem keiner keinen
ஆறாம் வேற்றுமை keines keines keiner keiner


குறிப்பு: நிச்சய பெயர்ச்சொற்குறியின் உருபும் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறியின் உருபும் முதலாம் வேற்றுமை மற்றும் இரண்டாம் வேற்றுமைகளின் ஒன்றன் பாலில் மட்டுமே மாறுபடுகின்றன.


உடைமையை குறிக்கும் பெயர்ச்சொற்குறி போன்ற இடப் பெயர்ச்சொற்கள்

நிச்சய உடைமை (Definite possessive) [of the-அதனுடைய]

  • ஆண்பால் (ஒருமை) : dessen
  • ஒன்றன் பால் (ஒருமை) : dessen
  • பெண்பால் (ஒருமை) : deren
  • பன்மை : deren

வினா உடைமை (Interrogative possessive) [of what-எதனுடைய]

  • ஆண்பால் (ஒருமை) : wessen
  • ஒன்றன் பால் (ஒருமை) : wessen
  • பெண்பால் (ஒருமை) : wessen
  • பன்மை : wessen


மேலும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.