பெயர்ச்சொற்குறி (ஆங்கில இலக்கணம்)

பெயர்ச்சொற்குறி என்பது, ஒரு பெயர்ச்சொல்லுடன் ஒன்றி வந்து, அதை சார்ந்த பெயர்ச்சொல்லைக் குறித்து எண், அளவு, குறிப்பு போன்ற சற்று பயனுள்ள விபரங்களை உணர்த்தும். ஆங்கிலப் பெயர்ச்சொற்குறி (article) என்பது, ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் பெயர்ச்சொற்குறிகளை குறிக்கும்.

ஆங்கிலப் பெயர்ச்சொற்குறியின் வகைகள்

ஆங்கிலத்தில் இரண்டு வகையான பெயர்ச்சொற்குறிகள் உண்டு. அவை,

  1. நிச்சய பெயர்ச்சொற்குறி (definite article)
  2. நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி (indefinite article)

நிச்சய பெயர்ச்சொற்குறி

நிச்சய பெயர்ச்சொற்குறி (definite article) என்பது, முன்பே அறியப்பட்ட ஒரு பொருளையோ அல்லது அறியப்படாத ஒரு பொருளை குறிப்பிட்டு சொல்லவுமே பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில், "The" என்னும் ஒரே ஒரு நிச்சய பெயர்ச்சொற்குறி தான் உள்ளது.

(எ-டு)

  1. The tall tree. (பெரிய மரம்.)
  2. The beautiful flower. (அழகான பூ.)
  3. The Sun rises in the East. (சூரியன் கிழக்கே உதிக்கின்றது.)

நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி

நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி (definite article) என்பது, எந்த ஒரு பொருளையும் குறிப்பிடாமல், பொதுவாக சொல்வதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்தில், "A", "An" என இரண்டு நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறிகள் உண்டு. "A" என்னும் நிச்சயமற்ற பெயச்சொற்குறி மெய்யெழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு வார்த்தைக்கு முன்னும், "An" என்னும் நிச்சயமற்ற பெயர்ச்சொற்குறி உயிரெழுத்தில் ஆரம்பிக்கும் ஒரு வார்த்தைக்கு முன்னும் உபயோகபடுத்தப்படுகின்றன.

(எ-டு)

  1. A tall tree. (ஒரு பெரிய மரம்.)
  2. A beautiful flower. (ஒரு அழகிய பூ.)
  3. An apple. (ஒரு ஆப்பிள்.)

மேலும் காண்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.