ஆஷ் துரை

ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் (Robert William Escourt Ashe) ICS (இந்திய நிர்வாகப் பணி) (பிறப்பு நவம்பர் 23, 1872 – இறப்பு ஜூன் 17, 1911) பிரித்தானிய அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் இருந்தவர்.[1][2][3] திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள மணியாச்சி தொடருந்துச் சந்திப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4] சுட்டவர் திருவிதாங்கூர் சமத்தானத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்கிற சங்கர அய்யர். ஆஷைக் கொன்றபின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். கொலை நடந்தபோது வாஞ்சியுடன் இருந்த சங்கர கிருஷ்ண அய்யர் என்ற இளைஞர் தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் அவர் சீக்கிரமே பிடிபட்டு தண்டனையளிக்கப்பட்டார்.[5] இந்தியச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போது தென்னிந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் ஒருவர் மட்டும்தான். பிரித்தானிய அரசு 1913ல் தூத்துக்குடியில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியது. இப்பொழுது அந்த நினைவுச் சின்னம் பாழடைந்த நிலையிலுள்ளது.[6][7]

ஆஷ் துரை
ஆஷ் அவரது மனைவி மேரி மற்றும் குழந்தைகளுடன்
பிறப்பு23 நவம்பர் 1872
இறப்பு17 சூன் 1911 (அகவை 38)
மணியாச்சி ரயில் நிலையம், தற்போது வாஞ்சிமணியாச்சி என்று பெயரிடப்பட்டுள்ளது

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.