ஆஷஸ்

ஆஷஸ் (Ashes) என்பது பழமையான துடுப்பாட்டத் தொடர் ஆகும். தேர்வுத் துடுப்பாட்ட வகையைச் சேர்ந்த இத்தொடர் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே 1882-ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது. போட்டிகளின் எண்ணிக்கையில் பல்வேறு மாறுதல்கள் இருந்தாலும் 1998 ஆண்டில் இருந்து ஒரு தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் என்ற அளவில் விளையாடப்பட்டு வருகின்றது. இது ஐக்கிய இராச்சியம் அல்லது ஆத்திரேலியா நாடுகளில் நடைபெறும். ஒருவேளை தொடர் வெற்றி/தோல்வியின்றி சமமாக முடிந்தால் அதற்கு முந்தைய தொடரில் வெற்றி பெற்றிருந்த அணி ஆஷஸ் தாழியைத் தக்கவைத்துக் கொள்ளும்.

ஆஷஸ்
The Ashes
ஆஷஸ் தாழி
நாடு(கள்) இங்கிலாந்து
 ஆத்திரேலியா
நிர்வாகி(கள்)பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை
வடிவம்தேர்வுத் துடுப்பாட்டம்
முதல் பதிப்பு1882/83 (ஆத்திரேலியா)
கடைசிப் பதிப்பு2019 (இங்கிலாந்து)
போட்டித் தொடர் வடிவம்5 போட்டிகள் கொண்ட தொடர்
மொத்த அணிகள்2
தற்போதைய வாகையாளர் ஆத்திரேலியா
அதிகமுறை வெற்றிகள் ஆத்திரேலியா (33 முறை)
அதிகபட்ச ஓட்டங்கள் டான் பிராட்மன் (5,028)
அதிகபட்ச வீழ்த்தல்கள் ஷேன் வோர்ன் (195)
ஆஸ்திரேலியா

இங்கிலாந்து அணித்தலைவர் இவோ பிளைக்குத் தனிப்பட்ட முறையில் பரிசாக வழங்கப்பட்ட ஆஷஸ் தாழி தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் உள்ள எம்சிசி அருங்காட்சியகத்தில் உள்ளது. தொடரில் வெல்லும் அணிக்கு வெற்றியின் அடையாளமாக ஆஷஸ் தாழியின் பிரதி வழங்கபடுகிறது. மேலும் 1998-99 தொடரில் இருந்து ஆஷஸ் தொடர்களில் வெற்றிபெறும் அணிக்கு ஆஷஸ் தாழி போன்ற தோற்றத்தில் வாட்டர்ஃபோர்ட் படிகத்தால் செய்யப்பட்ட ஆஷஸ் கிண்ணம் ஒன்றும் வழங்கப்பட்டு வருகிறது.

வரலாறு

1882-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் ஆஸ்திரேலிய அணி 7 ஓட்டங்களால் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதை விமர்சித்து எழுதிய இங்கிலாந்து பத்திரிகையான 'த ஸ்போர்டிங் டைம்ஸ்', இங்கிலாந்து துடுப்பாட்டம் இறந்துவிட்டது, இங்கிலாந்து துடுப்பாட்டம் எரிக்கப்பட்டு அதன் சாம்பல் ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு விட்டது என இரங்கல் செய்தியாக அறிவித்தது. இதையடுத்து இங்கிலாந்து அணித்தலைவராக இருந்த இவோ பிளை அடுத்து வரும் குளிர்காலத்தில் ஆஸ்திரேலியா சென்று விளையாடவுள்ள 1882-83 தேர்வுத் தொடரை வென்று சாம்பலை மீட்டுக் கொண்டுவருவோம் என்று சூளுரைத்தார். இதனால் சாம்பலை மீட்கும் சவால் என்று அந்தச் சுற்றுப்பயணத்தை இங்கிலாந்து ஊடகங்கள் குறிப்பிட்டன.

இவோ பிளை தலைமையிலான இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சென்று மூன்று போட்டிகள் கொண்ட 1882-83 ஆஷஸ் தொடரில் விளையாடியது. இரண்டு போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகிக்க, மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து வென்று ஆஸ்திரேலியாவைப் பழிதீர்த்தது. அதற்குப் பரிசாக மெல்போர்னைச் சேர்ந்த மூன்று பெண்கள், இங்கிலாந்து அணித்தலைவர் இவோ பிளைக்கு, மட்பாண்டத்தால் செய்யப்பட்ட தாழியைப் பரிசாக வழங்கினர். அதில் மூன்றாவது போட்டியில் பயன்படுத்தப்பட்ட மரத்துண்டுகளின் சாம்பல் இருப்பதாகக் கருதப்படுகிறது.[1] இதுவே ஆஷஸ் தொடர் உருவான வரலாறு ஆகும்.

முடிவுகள்

2017-18 வரை நடைபெற்ற ஆஷஸ் தொடர்களின் முடிவுகள்:

தொடர் முடிவுகள்
தொடர்கள் ஆத்திரேலியா வெற்றி இங்கிலாந்து வெற்றிவெற்றி/தோல்வி இன்றி முடிவு
7133326

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.