ஆலுவா
ஆலுவை (ஆலுவா) என்னும் ஊர், கேரளத்தின் எறணாகுளம் மாவட்டத்தில் உள்ளது.
— நகரம் — | |
![]() வரைபடம்:, இந்தியா | |
![]() ![]() ஆலுவா
, | |
அமைவிடம் | 10°07′00″N 76°21′00″E |
மாவட்டம் | எர்ணாகுளம் |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • உயரம் |
• 8 மீட்டர்கள் (26 ft) |
இங்கிருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் கொச்சி விமான நிலையம் அமைந்துள்ளது. திருவிதாங்கூர் அரசரின் கோட்டை இங்குள்ளது. இங்கு பெரியாறு என்ற ஆறு பாய்கிறது. தொடங்கப்படவிருக்கும் கொச்சி மெட்ரோ திட்டத்தின் முதன் ரயில் நிலையம், ஆலுவையில் அமைக்கப்பட்டுள்ளது. ஆலவாயில் என்ற பெயர் ஆலமரத்தினால் உண்டானது என்று கருதுகின்றனர். இதற்கு சான்றாக, இங்குள்ள சிவன் கோயிலின் மேற்கில் ஆலமரம் உள்ளது. ஆலுவா-நடுங்ஙல்லூர்-திருவால்லூர் ஆகிய மூன்று ஊர்களையும், பாம்பின் வாய், நடுப்பகுதி, வால் என கூறுவதாக புராணக் கதை கூறப்படுகிறது. ஆலுவையிலும், நடுங்ஙல்லூரிலும், திருவால்லூரிலும் உள்ள கோயில்கள் தொடர்பாகவே இக்கதை சொல்லப்படுகிறது.
படங்கள்
- ஆலுவை பாலம்
- பெரியாறு புழா
- சிவன் கோயில்
- ஆலுவை நகராட்சி பேருந்து நிறுத்தம்
- ஆலுவை பைப்பாஸ் சந்திப்பு
- வங்கி சந்திப்பு
- மார்த்தாண்டவர்மா பாலம்
- மங்கலப்புழா பாலம்
- மங்கலப்புழா பாலம்
- ஆலுழை ரயில் நிலையம்
- பெடரல் வங்கியின் தலைமை பணியகம்
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.