ஆரியப்படை

ஆரியர் படை சங்ககாலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து தாக்கியது. இதனை ஆரியப்படை எனவும் குறிப்பிட்டனர்.

  • வல்லம் என்னும் ஊரில் தாக்கிய ஆரியப் படையைச் சோழர்கள் தோற்றோடச் செய்தனர். [1]
  • முள்ளூர் என்னுமிடத்தில் தாக்கிய ஆரியர் படையை மலையமான் திருமுடிக்காரி வேல் கொண்டு தாக்கி ஓடச் செய்தான்.[2]

இவை இரண்டும் பண்டைய தமிழகத்தின் கிழக்குப்பகுதியில் நடந்த தாக்குதல்கள்.
இவற்றைப் போலப் பாண்டிய நாட்டில் நிகழ்ந்த தாக்குதலை முறியடித்தவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்.

  • மோரியர் தாக்கத்துக்கு மோகூர் பணியவில்லை எனபதை இங்கு நினைவுபடுத்திக் கொள்வது நலம். [3]

அடிக்குறிப்பு

  1. மாரி அம்பின் மழைத்தோல் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக (தலைவனை என்னுடன் திரியவைக்காவிட்டால் என் தோளில் வீங்கிய வளையல்) அகம் 336 பாவைக் கொட்டிலார்
  2. ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு நம் பன்மையது எவனோ (தலைவி ஒருத்தி முன் பரத்தையர் பலர் என்னாவர்?) - நற்றிணை 170
  3. வெல்கொடி துனைகால் அன்னை, புனைதேர் கோசர், தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில், இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின், பகை தலைவந்த மாபெருந்தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார்.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.