மோரியர்
மௌரியப் பேரரசு சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது.

கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது. இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று மகதநாட்டுப் பரப்பளவை 50லட்சம் சதுர-கிலோமீட்டர் பரப்புள்ளதாக விரிவுபடுத்தினான். கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியரின் தாக்கம் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்டது.
எங்கு எப்போது முறியடிக்கப்பட்டது எனபதைக் காட்டும் சான்று சங்கப்படலில் உள்ளது.
கோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில் மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது.[1]
வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.[2]
இப்போதுள்ள மங்களூர் மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நூழைந்தது. வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர்.[3][4]