வடுகர்

சங்ககாலத்தில் வடுகர் இன மக்கள் வேங்கடமலைக்கு வடக்கில் வாழ்ந்துவந்தனர். தெற்கே வாழ்ந்த மக்கள் அவர்கள் வாழும் பகுதியைத் தாண்டிப் பொருளீட்டச் செல்வதுண்டு. அப்போது தம் உணவைப் பங்கிட்டு விருந்தளித்து மகிழ்ந்தனர். [1] தமிழ்நாட்டுக்கு வடக்கில் உள்ளவர் பேசிய மொழியை வடுகு என்று கலிங்கத்துப் பரணி என்னும் நூல் குறிப்பிடுகிறது. [2] வடுகு மொழி பேசப்பட்ட நாடு கருநாடகம். இது வடக்கர் என்பது மறுவி வடுகர் என்றாயிற்று என்றோ, தமிழின் பிழை பட்ட மொழி (வடுப்பட்ட மொழி) வடுகு பேசுவோர் வடுகர் எனப்பட்டனர் என்றோ கொள்ள வைக்கிறது.

மகிசா என்னும் 'வடுகர் பெருமகன்' நாட்டில் அயிரி ஆறு பாய்ந்தோடிற்று. [3]

வடுகர் பேசும் மொழியை 'கல்லா நீண்மொழி' என்றனர். வேட்டைநாயுடன் அவர்கள் செல்வார்களாம். புலி உண்டபின் மாறையில் போட்டுவிட்டுப் போன மான்மறி, மூங்கில்நெல் அரிசி, பசு வெண்ணெய் கலந்து சமைத்த புலவு உணவை விருந்தினர்களுக்குத் தேக்கிலையில் பகிர்ந்து அளிப்பார்களாம். அவரது சிறுவர்கள் இரும்பைப் பூவை அம்பெய்து உதிர்த்து அவர்கள் மேய்க்கும் காளைமாடுகளை உண்ணச் செய்வார்களாம். அவற்றை உண்ணவரும் மான்களை விரட்டி ஓட்டுவார்களாம். [4]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. நற்றிணை 212, குறுந்தொகை 11, அகநானூறு 107, 213, 281, 253, 295, 375, 381, புறநானூறு 375 ஆகிய பாடல்களில் இவர்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
  2. மழலைத்திரு மொழியிற் சில வடுகும் சில தமிழும்
    குழறித்தரு கருநாடியர் கறுகிக்கடை திறமின். பாடல் 43
  3. (அகம் 253)
  4. (அகம் 107)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.