ஆய்னான்

ஆய்னான் அல்லது ஹைனான் (Hainan, சீனம்: 海南; பின்யின்: ஹாய்னான் ) என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள மிகச் சிறிய மாகாணம் ஆகும். இங்கு இருநூறுக்கும் அதிகமான தீவுகள் உள்ளன. ஆனால் இதன் பெரும்பாலான நிலப்பகுதி ஹைனான் தீவில் (Hainan Dao) காணப்படுகிறது. இத்தீவின் பெயரில் இருந்தே இம்மாகாணத்திற்கு ஹைனான் எனப் பெயரிடப்பட்டது. பொதுவாக சீனர்கள் ஹைனான் தீவையே ஹைனான் என அழைக்கின்றனர். ஹைனான் என்றால் ”கடலின் தெற்கு” என்று பொருள். ஆனாலும், தெற்கில் உள்ள ஸ்பிராட்லி தீவுகள், பரசெல் தீவுகள், மற்றும் சர்ச்சைக்குரிய சில கடற்பகுதிகளும் இந்த மாகாணத்தைச் சேர்ந்தது என சீன அரசு கருதுகிறது. அத்துடன் இந்த மாகாணம் சீனாவின் சிறப்புப் பொருளாதார வலயங்களில் மிகப்பெரியது ஆகும்.

ஆய்னான் மாகாணம்
海南省
மாகாணம்
பெயர் transcription(s)
  சீனம்海南省 (ஆய்னான் ஷெங்)
  சுருக்கம்琼/瓊 (pinyin: Qióng, khêng)
   Hái-lâm-séng

சீனாவில் அமைவிடம்: ஆய்னான் மாகாணம்
Named for海 hǎi - பெருங்கடல்
南 nán - தெற்கு
"தெற்குப் பெருங்கடல்"
தலைநகரம்
(மற்றும் பெரிய நகரம்)
ஆய்-காவு (Hái-kháu)
பிரிவுகள்2 அரச தலைவர், 20 கவுண்டி மட்டம், 218 நகர மட்டம்
பரப்பளவு
  மொத்தம்33,920
பரப்பளவு தரவரிசை28வது
மக்கள்தொகை (2009)
  மொத்தம்8
  தரவரிசை28வது
  அடர்த்தி250
  அடர்த்தி தரவரிசை17வது
மக்கள் வகைப்பாடு
  இனங்கள்ஹான் - 83%
லீ - 16%
மியாஒ - 0.8%
ட்சூஅங் - 0.7%
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-46
GDP (2009)CNY 164.7 பில்லியன் (28வது)
 • per capitaCNY 19,166 (23வது)
HDI (2006)0.767 (medium) (16வது)
இணையதளம்http://www.hi.gov.cn
(எளிய சீனம்)

சீனாவின் தெற்குமுனையில் காணப்படும் ஹைனான் தீவு தென் சீனக் கடலில் அமைந்துள்ளது. 33,920 சதுர கிமீ பரப்பளவுடையது. பல நூற்றாண்டுகளாக இது குவாங்டொங் மாகாணத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. பின்னர் இது அதன் சிறப்பு பொருளாதார நிலைக்காக தனியான மாகாணமாக ஆக்கப்பட்டது. இதன் தலைநகரம் ஐக்கோ (Haikou).

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.